தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை VIT இணைந்து, ஏப்ரல் 18 மற்றும் 19, 2026 ஆகிய 2 தேதிகளில் சென்னையில் நடத்தும் பிரம்மாண்டமான மாபெரும் கல்வி கண்காட்சி (Education Expo) தொடங்கி உள்ளது. இந்த கல்வி கண்காட்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்று அரங்கம் அமைத்து உள்ளன.
Long Distance Bus & Rail
பிளஸ் 2 மாணவர்களுக்காக நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் துவங்கி நடைபெற்று வரும் இந்த மாபெரும் கல்வி கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று உயர்கல்வி வாய்ப்புகள், பொறியியல், மற்றும் தொழில்நுட்பக் கல்வி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த மாபெரும் கல்வி கண்காட்சியின் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (ஹால் 1பி) நடைபெற்றது.
பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்! எங்கு படிக்கலாம்! கல்விக்கடன் கிடைக்குமா! என்ன படித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்! இப்படி உயர்கல்வி தொடர்பான மாணவர்களின் அனைத்து முக்கிய சந்த்கேங்களுக்கும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி 2026 தீர்வாக இருக்கும். உயர் கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க கல்வியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகிறர்கள். பிளஸ் 2 படித்து முடித்து விட்டு தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன படிக்கலாம்; எந்த கல்லூரியில் சேரலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு ஆண்டும் தினகரன் நாளிதழ் சார்பில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரமாண்ட கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
- தொ

More Stories
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகளின் கடந்த கால வரலாறு..!
18-வது சுனாமி நினைவு தினம்: சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை