April 18, 2026

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகளின் கடந்த கால வரலாறு..!

  1. தருமபுரி – தருமபுரி தொகுதியில் தான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையேழு வள்ளல்களில் ஒருவர் அதியமான் ஆட்சி செய்த அதியமான் கோட்டை வருகிறது
  2. செஞ்சி – பல்லவர்கள் காடவராயர், ஆட்சி பகுதி அடுத்தபடியாக நாயக்கர்கள் மராட்டியர்கள் என ஆட்சி செய்த இடம் இங்கேயும் ஆட்சிக்கான கோட்டைகள் இருக்கு பாளைய கவுண்டர் & நாயகர் முறை இருக்கு
  3. போளூர் – பல்லவர்களின் தொடர்ச்சியான சம்புவராயார்கள் ஆட்சி செய்த படைவீடு இந்த தொகுதியில் தான் வருது
  4. திருப்போரூர் – இதுவும் பல்லவர்கள் ஆட்சி செய்த பகுதி சோழர்களும் நிர்வாகம் செய்த இடம் புகழ்பெற்ற கந்தசாமி கோவில் பல்லவர் காலம் என்று சொல்லப்படுகிறது
    இங்குள்ள திருப்போரூர் ஆதீனம் தமிழையும் சைவத்தையும் வளர்க்கும் பணியைச் செய்து வருகிறது.
  5. காட்டுமன்னார் கோவில் – சொல்லவா வேண்டும் ? 10 நூற்றாண்டில் பராந்தக சோழனின் மகனான இராஜாதித்த சோழனால் உருவாக்கப்பட்ட ஏரி தான் இன்னைக்கு சென்னைக்கே குடிநீர் சோழர்களின் ஆட்சி பகுதி
  6. விருத்தாச்சலம் – அந்த மண்ணே செங்குருதியில் நனைந்தது போல செம்மண் தான் சோழன், பல்லவன், பாண்டியன் என அனைத்து நிர்வாகமும் இருந்தது
    விருத்தகிரீஸ்வர் கோவில் சோழர்களின் ராஜமாதா எனும் செம்பியன் மாதேவி கட்டியது அந்த அளவிற்கும் பழமையும் பெருமையும் கொண்டதோடு மட்டுமல்ல கடைசி மன்னார் ஆட்சி பரூர் கச்சிராயர்கள் ஆட்சி செய்த இடம் இந்த தொகுதி உள்ளே தான் வருகிறது
    7 – ஜெயங்கொண்ட சோழபுரம் – இதை பத்தி நான் சொல்லணுமா ? என்ன ? மொத்த சோழர்களின் வரலாறே இங்க தான்.
    8 – ரிஷிவந்தியம் 1000 ஆண்டுகள வரலாறு கொண்ட பகுதி கண்டராதித்த சோழன் கொடை கொடுத்த இடம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் பல்லவர் கால கட்டிட்ட கலை இருக்கு நாயக்க மன்னர்களும் ஆட்சி செய்த பகுதி
    9 – உத்திரமேரூர் – முக்கியமா பாருங்க இதை சொல்ல மறந்துட்டேன் உத்திரமேரூர், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு “தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஊர்”. உலகிற்கே ஜனநாயகத்தின் வேர்களைக் கற்றுக்கொடுத்த பெருமை இந்த ஊருக்கு உண்டு.
    இவ்வூர் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவனால் (இரண்டாம் நந்திவர்மன்) உருவாக்கப்பட்டது
    பல்லவர்களின் இதயம் என்று கூட சொல்லலாம் கூடவே சோழர்களுக்கும் மிகப்பெரிய வரலாறு கொண்ட பெயரிலே தொகுதி இருக்கிறது.
    10 , 11, 12 – பென்னாகரம், சேலம் மேற்கு & வடக்கு – இது சோழர்கள் காலம் மட்டுமல்ல அதற்கு முந்திய சேரர்கள் ஆட்சி பகுதி , கொல்லிமலை ஓரி – தகடூர் அதியமான் இருவரின் எல்லை பகுதி என்று கூட சொல்லலாம் மற்ற பகுதிகளில் பெரிய நிலப்பரப்பை மன்னர்கள் ஆண்டார்கள் ஆனால் இங்கு சிறு சிறு பகுதியாக சேரர் ஆட்சி முறை இருந்தது இன்னும் சொல்லபோனால் குறுநில மன்னர்களாக சேரர், மழவர் கிளைகள் இருந்தது நடுகள் வழிபாடு இன்றளவும் நடக்கும் பகுதி இவற்றின் ஆட்சி முறைக்கு இங்குள்ள ஊர் கவுண்டர் முறையே சாட்சி.
    13 – விக்கிரவாண்டி – புவனிமானிக்கபுரம், விக்கிரபாண்டி இது தான் பழைய பெயர் பல்லவர்கள் காலத்தில் முக்கிய ராணுவ பகுதியாக இருந்தது
    14 – மயூரம் எனும் மயிலாடுதுறை – இதை பத்தி பேசணும்ன்னா பக்கம் பக்கமா எழுதனும் சோழர்களின் சொர்கபூமி, கடைசியாக மயூரம் அஞ்சாத சிங்கம் பாளையக்காரர் ஆட்சிசெய்த பகுதி
    15 – கீழ்வேளூர் – சோழர்களின் வணிகத்தை போற்றும் ஒரு முக்கிய இடம் முற்கால சோழர்களின் வரலாறு இங்கு இருக்கு
    16 – சோளிங்கர் – இதனுடைய பழைய பெயர் “சோழசிம்மபுரம் ” பல்லவ மன்னர்களின் காலத்தில் இப்பகுதி ஒரு முக்கியக் கல்வி மையமாக (கடிகை) விளங்கியது. காஞ்சிபுரத்தைப் போலவே இங்கும் வேதக் கல்விக் கூடங்கள் இருந்தன.
    பராந்தக சோழன் மற்றும் பிற பிற்காலச் சோழ மன்னர்கள் இக்கோயிலுக்குப் பல தானங்களை வழங்கியுள்ளனர். சோழர்களின் ஆட்சியில் இப்பகுதி ஒரு முக்கிய ராணுவத் தளமாகவும், வணிகப் பாதையாகவும் இருந்தது.
    17 & 18 – அம்பத்தூர் – பெரம்பூர் பழங்கால பல்லவ நகரம்
    ஆக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 18 தொகுதியும் முன்னாடி நம்ம பட்டான், பூட்டன், சேயோன் என தமிழ் குடிகள் நம் முன்னோர்கள் ஆண்ட இடம் தான் அன்று வடுக விஜயநகர அரசிடம் இழந்தவை மீண்டும் அதை கைப்பற்ற நமக்கு ஒரு வாய்ப்பு.
    மீண்டும் நம் ஆட்சியை கொண்டு வருவோம்

இதுபோன்ற இன்னும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டு இருக்கிறது. அதனையும் அறிந்து கொள்வதற்கான முழு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உண்மைகளை அறிந்து தெரிந்து வாக்களித்தால் நம்மை ஒருவரும் வெல்லமுடியாது. வன்னியர்களுக்கு வாக்களிப்போம். கட்சிகள் தடையில்லை. அரசியலில் வளர்ந்து சாதனை புரிந்தவர்கள் கட்டாயம் வெற்றிப் பெற்றாக வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் சட்டமன்றத்தில் வரலா-று படைப்போம்.

துரையும், முருகனும், அன்பும், மணியும் நமக்கு துணை…!