மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- பான் கார்டு இனி முக்கிய அரசுத் துறை கொள்கை சேவைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும். ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
விசித்திரமான தேர்தல்
வித்தியாசமான அணுகுமுறை
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அலட்சியம்…
சீட்டுக்கு அலையும் கூட்டணி கட்சிகள்
பரிதாப நிலை….!
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி ராஜ்யசபைக்கான வேட்புமனு தாக்கல்
புதுச்சேரி மொத்தம் 30 தொகுதிகள்