கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கிய பாத யாத்திரை தற்போது காஷ்மீரை அடைந்துள்ளது. பாத யாத்திரை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின் யாத்திரை நிறைவடைகிறது. இந்நிலையில், பாதயாத்திரை இன்று காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, 40 வீரர்கள் உயிரிழந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் லெத்போராவில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைபாதையின்போது பிரியங்கா காந்தியும் இணைந்துக் கொண்டார். இடைவேளைக்காக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை அவந்திபோராவில் இருந்து மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரை இன்று இரவு பந்தாசௌக்கில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

More Stories
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசனை