3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தமிழக அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தீர்மானத்தில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது:
- 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை.
- மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை.
- வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
- மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளன.
- சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை.
- மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும்.
- மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…