July 18, 2024

பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்?

தமிழக அரசியலில் வரலாற்று சாணக்கியனுக்கு அடுத்தப்படியாக சாணக்கியர் என்ற பெருமையுடன் புகழுடன் அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன். பள்ளிப் படிப்பை முடித்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பு (பி.ஈ.ஆனஸ்ட்) முடித்த பின் அரசு பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே பேரறிஞர் அண்ணா, பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களுடன் பணியாற்றி உள்ளார்.

சுமார் தமிழக அமைச்சரவையில் பதினைந்து, இருபது ஆண்டுகள் கொடிகட்டி பறந்தவர். இவர் வகிக்காத இலாக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முதல்வர் பொறுப்பினையும் ஏற்று செயல்பட்டுள்ளார். இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் முழு பாராட்டையும் பெற்று இந்திய அரசியல் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பொழுது உலக தலைவர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்து பாராட்டுகளை பெற்றவர். குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை ஐ.நா மன்றத்தில் பதிவு செய்த பெருமை இவரையே சாரும். அதே போல் இலங்கை தமிழர்கள் பிரச்சனையையும், விடுதலை புலிகள் போராட்டத்தினையும் ஐ.நா. சபையில் எடுத்துரைத்து உலக தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று சுமுகமான ஒரு ர்வு எட்டப்பட வேண்டும் என்று இலங்கை பிரச்சனை என்று உரக்க குரல் எழுப்பியவர் முன்னாள் பிரதமர் ரா வ்காந்தி அவர்கள் பிரதமராக இருந்த பொழுது சிறப்பு விமானத்தை அனுப்பி பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை அழைத்து வந்து இலங்கை பிரச்சனைக்கு ர்வு காண பிரபாகாரனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது உடன் இருந்து சுமுக ர்வுக்கு வழிவகுத்தவர்.

இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய மனிதர் தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி வட்டம் புலியூர் கிராமத்தில் பிறந்து சிறந்த கல்வி கற்று உலகளவில் பேசப்படுகின்ற ஒரு மனிதராக இன்றும் சென்னையில் வசித்து வருகிறார். இன்றும் முழு உடல் நலத்துடன் சிறந்த பேச்சாளாராகவும், எழுத்தாளராகவும் விளங்கி வருகிறார். எந்த நேரமும் பல தலைவர்கள் நூல்கள் படிப்பதை ஆர்வமாக கொண்டுள்ள இவர் உலக அரசியலை அவ்வவ்பொழுது நடைபெறும் செயல்களை உன்னிப்பாக கவனித்து அலசி ஆராய்ந்து தன் உள்ளங்கையில் வைத்திருக்கிறார்.

தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சரளமாக உரையாற்றி சிறப்பு பெற்று விளங்குகிறார். காலத்தின் கட்டளையை ஏற்று தனது அரசியல் கடமையை செய்வதில் சற்று விளகி இருந்தாலும் எப்பொழுதும் விர அரசியல் களத்தில் போராடி வெற்றிபெறும் சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகிறார். அரசியலில் இவரது தேவையும், சேவையும் பலருக்கு தேவைப்படும் அளவிற்கு துள்ளியமான கணிப்புகளை கணித்து சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர். தற்பொழுது இவர் சார்ந்துள்ள அதிமுக கழகம், இவரை முழுமையாக பயன்படுத்துகிறதா இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

அரசியலில் அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் இவர் வெளிப்படுத்தமாட்டார். மீண்டும் எப்பொழுது விர அரசியலில் ஈடுபட போகிறார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இதுதான் இப்பொழுது உள்ள பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் அவர்களுடைய குறிப்பு.

அதிமுக இரண்டாக உடைந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு இரண்டாக பிளவுப்பட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று உருவான போது எதிர்காலத்தில் ஜெயலலிதா அணி தான் வெற்றிப்பெறும் என்று அன்றே கணித்தவர். அதுமட்டும் அல்ல ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக முன்மொழிந்தவரும் அவரே. ஆனால் அதிக ஆதாயத்தை எம்.ஜி.ஆருக்கு பிறகு இவர் பெறவில்லை.

மின்சாரதுரை அமைச்சராக இருந்த பொழுது ஏழை குடிசைகளுக்கு மின்சார விளக்கு எரிவதற்கு காரணமாவதற்கும், உணவு அமைச்சராக இருந்த பொழுது விலைவாசி ஏறாமல் இருந்ததற்கும் இவரது முயற்சியே காரணமாகும்.