பாஜகயில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது அதிரடி பிரகடனத்தை வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை தோற்றிவித்துள்ளார். “வளர்ச்சி திட்டங்களுக்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது” என்று கூறி திமுக கூடாரத்திலும் ஒருவிதமான சலசலப்பை உண்டாக்கி விட்டார் அகில பாரதிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பொறுப்பேற்றதிலிருந்து சில மாதங்கள் அமைதியாக இருந்தவர் தற்பொழுது அதிவேகமாக செயல்பட துவங்கியுள்ளார். குறிப்பாக தமிழக பாஜக கட்சிக்கு மாற்று கட்சியில் இருந்து வருபவர்களையும், முதியவர்களையும் கட்சியில் இணைத்து அவரும் தங்களது கட்சியில் பலத்தை உயர்த்தி வருகிறார்.
கர்நாடகா மாநிலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அண்ணாமலை ஐ.பி.எஸ். தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். இன்னும் இதுபோல் பல இளம் அதிகாரிகள் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணைவார்கள் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் மாநில தலைவர் எல்.முருகன். ஆக பாஜக கட்சி திமுக நேரடி மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. இந்த மோதல் அதிமுக அணிக்கு பலம் சேர்க்குமா? அல்லது பாஜக கட்சிக்கு பலம் சேர்க்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
More Stories
ஈரோடு இடைத்தேர்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்…!
இடைத்தேர்தல் முடிவு…!
இடியாப்ப சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..!
பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு