February 18, 2025

திண்டிவனம் கே.இராமமூர்த்தி எக்ஸ்.எம்.பி சிந்தனை துளிகள்! பத்திரிகையாளரை தட்டிக்கேட்டார்!

பத்திரிகையாளரை தட்டிக்கேட்டார்!

அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு

வடாற்காடு மாவட்டத்தில் பெருந்தலைவர் சுற்றுப்பயணம் செய்தார். மாவட்ட தலைவர் பலராமன் எக்ஸ்.எம்.பி., ஏற்பாடுகளை செய்திருந்தார். பயணியர் விடுதியில் தலைவர் தங்கியிருந்தார். திடீரென அவரைப் பார்ப்பதற்கு அன்றைய மாவட்ட ஆட்சியர் ராமமூர்த்தி மிகிஷி அதிகாரி என்கிற முறையில் காமராஜரை பார்க்க வந்தார். அவர் பெருந்தலைவரிடம் சில பேப்பர்களை கொடுத்து பேசிவிட்டு சென்றுவிட்டார். அன்றைய தினம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு சென்னை திரும்பினோம். வீட்டிற்கு வந்தவுடன் அவருடைய காப்பாளர் வைரவனை அழைத்து நாளை காலையில் “சிகப்பு நாடா”, கையிலை மன்னனை என்னை வந்து பார்க்கச்சொல் என்று சொன்னார். அடுத்த நாள் காலையில் கையிலை மன்னன் காமராஜிடம் வந்தார். அவரை பார்த்தவுடன் காமராஜருக்கு கோபம் வந்தது. நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். பத்திரிகை கையில் இருந்தால் எது
வேண்டுமானாலும் எழுதலாமா? ராமமூருத்தி மிகிஷி அதிகாரியைப் பற்றி உனக்கு என்ன தெரியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், வீடும் விருந்தினர் விடுதியில் வேலூரில் ஒரே காம்பவுண்டுக்குள் தான் இருக்கிறது. அங்கு அமைச்சர் என்கிற முறையில் (ப.ஊ.சண்முகம்) தங்குவதை மாவட்ட ஆட்சியர் எப்படி தடுக்க முடியும் ப.ஊ.சண்முகம் அங்கு தங்கினால் அவரையும், மாவட்ட ஆட்சியர் குடும்பத்தையும் இணைத்து தாறுமாறாக எழுதுவதா? அவர் அரசாங்க அதிகாரி, உன்னைப்போல் மேடைப்போட்டு பதில் பேச முடியுமா? அல்லது பத்திரிக்கையில் எழுத முடியுமா? இப்படியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் எழுதுவது மிகப் பெரிய தவறு இதில் வேற உங்கள் பத்திரிக்கைக்கு காமராஜரின் போர்வாள் பெயரை எடுத்துவிடு என்றார். அதற்கு பிறகு கயிலை மன்னன் மன்னிப்பு கேட்டதுடன் மன்னிப்பை பத்திரிக்கையிலும் வெளியிட்டார். அந்த பெயரையும் எடுத்துவிட்டார். திமுக ஆட்சியில் செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் காமராஜர் அளித்த பாதுகாப்பு எத்தகையது என்பதை இன்றைய திமுக தலைவர்களும் மற்ற எதிர்கட்சி தலைவர்களும் தெரிந்துக் கொள்வார்களா?