April 19, 2025

உத்திரபிரதேச மாநிலம் சத்திரிய முதல்வர் ஆட்சியில்சத்திரியன் இராமனுக்கு ஆலயம்!பிரதமர் அடிக்கல் நாட்டினார்

சத்திரியன் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆட்சி செய்யும் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகரில் சத்திரியன் ராமன் ஆலயம் பூமி பூஜை இன்று நடைப்பெற்றது. இந்திய பிரதமர் மோடி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்பது பு30 கோடி மக்கள் வாழும் இந்திய திருநாட்டில் உள்ள இந்துக்களின் இதயத்தில் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் தோற்றுவித்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இதுபோன்ற துணிச்சலான நிகழ்வுகள் நிறைவேற்றுகின்ற பொறுப்பு ஒரு சத்திரியன் யோகி ஆதித்தியன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் ஒவ்வொரு சத்திரியனும் பாராட்டி பெறுமை படவேண்டிய விஷயமாகும். இத்தகைய பெரும் பொறுப்பை உ.பி.முதல்வர் அவர்களுக்கு வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக கட்சிக்கும் கோடிக்கணக்கான சத்திரியர்கள் பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். மதம், மொழி, இனம் இதை கடந்து நடைபெற்ற இந்த நிகழ்வு என்பது அனைத்து மதத்தினருக்கும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் அனைத்து அரசியல் இயக்கங்களின் பாராட்டுகளுடன் வரவேற்கத்தக்கது.