July 1, 2025

வெள்ளை நிற உடைக்கு மாறும் வழக்கறிஞர்கள்..

[responsivevoice_button voice=”Tamil Male”]நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், கறுப்பு நிற உடை அணிய வேண்டும்’’ என்பது ஆங்கிலேயர் காலத்து சட்டம். ஆண்டாண்டு காலமாக இன்று வரை அந்த காலனி ஆதிக்கம் நீதித்துறையில் தொடர்கிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், இனிமேல் கறுப்பு உடையை கழற்றி விட்டு, வெள்ளை நிற உடை அணிய சம்மதம் தெரிவித்துள்ளது, உச்சநீதிமன்றம். கொரோனா காரணமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் தான் வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள தங்கள் அறையில் விசாரணைக்காக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

வழக்கறிஞர்கள், தங்கள் அலுவலகங்களில், காத்திருந்தனர். நீதிபதிகள் வழக்கமாக அணியும் கறுப்பு கோட் அணிந்திருக்கவில்லை. பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா சேலை அணிந்திருந்தார். மற்ற இரு நீதிபதிகளும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தனர். வீடியோ கான்பரன்ஸ் ஆரம்பானதும், தாங்கள் கறுப்பு உடை அணிந்திருப்பது ஏன் என்பதற்கு விளக்கம் வெள்ளை நிற உடைக்கு மாறும் வழக்கறிஞர்கள்..அளித்தார், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே. கறுப்பு கோட் மற்றும் கறுப்பு உடை அணிவதால் கொரோனா வைரஸ் கூடுதலாக பரவும் ஆபத்து இருப்பதாக எங்களிடம் கூறப்பட்டது. எனவே கறுப்பு உடைகளை அணியாமல் வெள்ளை உடை அணிந்துள்ளோம்’’ என்று விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ’‘’ உங்களை போல், வழக்கறிஞர்களாகி எங்களுக்கும் கறுப்பு உடையில் இருந்து, மாற்றி,வெள்ளை உடை அணியும் வாய்ப்பை தர வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். “சம்மதம்’’ சொன்ன தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே..’ வீடியோ கான்பரன்சில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் இனி கறுப்பு உடை அணிய வேண்டாம் ’ என்று கூறிய கையோடு ஆணையும் பிறப்பித்தார். கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க ,ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. வழக்கறிஞர்கள் இனிமேல் வெள்ளை நிற சட்டை அணியலாம்.பெண் வழக்கறிஞர்கள் வெள்ளை நிற சல்வார் கமீஸ் மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து வீடியோ கான்பரன்சில் ஆஜராகி வாதாடலாம்’’ என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.