கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறித்து விளக்கமளித்த அவர், உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருப்பதாக தெரிவித்தார். கொரோனா தொற்று பரவி வருவதால், பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிப்பது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, தமிழ்நாட்டில் போதுமான அளவில் மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியதாகவும், அதில் வீரியம் இல்லாத கொரோனா தொற்றுதான் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
More Stories
மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…