சென்னை: 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில்,
*172 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
*1511 ஆழ்துளை மற்றும் குழாய் ” கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
*15,700 ஆதிதிராவிடர் பழங்குடியினர் உழவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
*4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1452 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.
*கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி, ரூ.510 கோடியில் விவசாயிகளின் இயந்திர தேவைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
*30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
*டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
*கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
*வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர்.
More Stories
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசின் தீர்மானங்கள்
தமிழ்நாடு நிதி நிலையில்
திட்டமும் நிதி ஒதுக்கீடும்…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!