விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டது. இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில், மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கேரளா என்ற பெயரை கேரளம் என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!