April 19, 2025

பல கட்சிகளை பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்ற கார்கே கிண்டலுக்கு மோடியின் பதில்…!!!

எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் நடைபெற்றது. 2-வது கூட்டத்தில் ஓரளவிற்கு மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்றே கூறலாம். நேற்றைய கூட்டத்திற்குப்பிறகு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே பா.ஜனதா டெல்லியில தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. இதில் 39 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான கட்சிகளை பற்றி கேள்விப்பட்டதே இல்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கிண்டல் செய்திருந்தார். அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:- தேசிய ஜனநாயக கூட்டணி வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. பங்களிப்பால் ஏற்பட்ட கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த கட்சியும் பெரிதோ, சிறிதோ அல்ல. பா.ஜனதா 2014 மற்றும் 2019-ல் மெஜாரிட்டி பெற்றிருந்தது. இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைத்தது” என்றார்.