காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டும் 15.7.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாக கொண்டாட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த 7,740 புத்தகங்களை அரசு பொது நூலகங்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
More Stories
மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…