March 28, 2026

விசித்திரமான தேர்தல்
வித்தியாசமான அணுகுமுறை
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அலட்சியம்…
சீட்டுக்கு அலையும் கூட்டணி கட்சிகள்
பரிதாப நிலை….!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் என்பது அரசியல் கட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையுமா? அல்லது கூட்டணி கட்சிகளின் மன குமுறலுக்கு தமிழக வாக்காளர்கள் தகுந்த பதிலடி தருவார்களா? என்ற கேள்வி எழுகிறது. ஒருபுறம் திராவிட முன்னேற்ற கழகம் வலுவான கூட்டணி அமைத்திருந்தாலும் தோழமை கட்சிகளின் கோரிக்கையை ஏற்பதில் இருமனதுடன் செயல்பட்டு கூட்டணி கட்சிகளின் உற்சாகப்படுத்துவதில் சற்று ஏறக்குறைய அலட்சியம் காட்சி வருவதாகவே பு-லம்புகின்ற நிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள். கேட்ட தொகுதிகளும் கிடைப்பதில் சிக்கல் கொடுக்க வேண்டிய தொகுதிகளிலும், ஒருசில தொகுதிகளை இழக்கவேண்டிய நிலை இப்படி பல வழிகளிலும் திராவிட முன்னேற பேச்சுவார்த்தை குழுவினர் தோழமைகளை கட்சிகளை ஒருகிணைப்பதில் உற்சாகப்படுத்துவதில் ஏனோ மெத்தன போக்கை கடைப்பிடிப்பதுடன் கராராக நின்று செயல்படுகிறார்கள்.

இதனால் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு தோழமை கட்சிகள் தொண்டர்கள் எத்தகைய நிலையை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதும் புரியாத புதிராக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை என்பதும் நடிகர் விஜய்யின் தாக்கமும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நாளுக்கு நாள் அச்சத்தை தோற்றுவிக்கும் விதமாக இருப்பதினால் அதிக இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என்று விரும்புவதுடன் தமிழக வெற்றிக்கழக த்தால் ஏற்படுகின்ற சரிவை தூக்கி நிறுத்துகின்ற விதமாகவும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாய நிலைக்கு திராவிட முன்னேற்ற கழகம் தள்ளப்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

கடந்த காலங்களில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை முன்னிலைப்படுத்தி பட்டியல்இன மக்கள் வாக்குகளையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலில் (2024), சட்டமன்ற தேர்தலில் (2021) வெற்றிப் பெற்றதை போல் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும் வெற்றியை ஈட்ட முடியுமா? என்பதில் கேள்விகுறியாக உள்ளது? இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்பிய இடம் கிடைக்காததினால் தாங்கள் விரும்பு-கின்ற இடத்தில் தனித்து போட்டியிடுவோம் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டு இருப்பது தமிழ்நாட்டின் எத்தகைய தாக்கத்தை பட்டியலின மக்கள் ஏற்படுத்த போகிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் தற்போதைய அரசியல் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற ஒற்றை கோஷம் அமித்ஷா, மோடி திட்டமிடல் இவைகளை தமிழக மக்களிடம் எடுத்து சொல்லி முழு வெற்றியை திராவிட முன்னேற்ற கழகம் அடைய முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. அசைக்க முடியாத கூட்டணி பலம் இருந்தாலும் திமுக கூட்டணியை அசைத்து பார்க்கின்ற அளவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் அமைந்து விட்டால் மிகப் பெரிய அளவில் இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு திராவிட முன்னேற்ற கழகம் தள்ளப்படலாம். இது ஒருபுறம் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுகழகத்தை அரசியல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாமல் போகலாம்.

ஆனால் சாதிய ரீதியாக வேல்முருகனின் முகம் வன்னியர்கள் அடையாளத்தை கொண்டு இருப்பதினால் வட தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலை திமுகழகத்திற்கு ஏற்படலாம். குறிப்பாக 10.5% வன்னியர் தனி உள்ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்க மறுத்த திமுகழகத்திற்கு ஏன் வாக்காளிக்க வேண்டும் என்ற கோஷத்தை வாக்காளர்கள் மத்தியில் வேல்முருகன் கொண்டு சென்றால் மிகப் பெரிய அளவில் திமுகழகத்தின் வெற்றியை பாதிப்புக்கு உட்படுத்த முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

இதே போல் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அன்புமணியோடு ஏற்பட்ட மோதல் காரணமாக தனித்து தேர்தலை சந்திக்கவும், சசிகலா அம்மையாருடன் சேர்ந்து என்று கூறியிருப்பது இன்னொரு பக்கம் வன்னியர் வாக்குகளை பிரிப்பதற்கு பயன்படுமா? என்றால் அத்தகைய முயற்சியில் டாக்டர் ராமதாஸ் சுலபமாக வெற்றிப்பெற இயலாது. மாறாக அன்புமணி இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வன்னியர்கள் வாக்குகள் அதிக அளவில் விழக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். காரணம் கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடாக 10.5% தனிஒதுக்கீடு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் வடதமிழகத்தில் சுமார் 100 தொகுதிகள் உள்ள நிலையில் 60 தொகுதிகளில் அதிமுக வெற்றியை உறுதி செய்வதற்கு வன்னியர் வாக்குகள் உறுதுணையாக அமையும் வாய்ப்பு ஏற்படலாம்.

திமுகவின் வேட்பாளர்கள் தேர்வும், அறிவிப்பும் எத்தகைய நிலையில் அமைந்தாலும் பணபலத்தை அதிக அளவில் செலவு செய்தால் வாக்காளர்களை கவர முடியும் என்ற மனநிலையில் திமுக இருப்பதாகவே பார்க்க படுவதால் திமுகவின் வெற்றி வாய்ப்பை எந்த அளவிற்கு அதிக இடங்களை கைப்பற்ற கூடும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படலாம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு ராஜ்யசபா இடமும், 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடும் திமுகவினர்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை. இத்தகைய முடிவால் தோழமை கட்சிகளும் மனகுமுறலுக்கு ஆளானார்களே தவிர கூட்டணி வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த முயற்சி திமுகவிற்கு எந்த வகையிலும் கைகொடுக்க போவதில்லை.

திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இடமும் திமுக தோழமை பாராட்டுவதை விட கேட்ட தொகுதிகளை கொடுப்பதற்கும் பணம் இல்லாமல் கூடுதல் தொகுதிகளை வழங்குவதற்கும் முன்வராமல் இருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி கூட மனகசப்புடன் இருப்பதாக டெல்லி தகவல்கள் கூறினாலும் சிதம்பரம் சோனியாகாந்தியின் அனுமதியை பெற்று கூட்டணியை உறுதி செய்வதற்கான வழியை உருவாக்கி இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது திமுக அணியை விட்டு வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கட்சி வளர்ச்சிக்கான பாதையில் செல்வது என்ற முடிவு முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பல காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் திமுக கூட்டணியில் இடைவெளியை அதிகரித்து உள்ளது.

இதன் மூலமாகவும் திமுக கூட்டணி எத்தகைய இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை கணக்கிட முடியாமல் இருக்கின்றது. மதிமுகவை பொறுத்தவரை நான்கு இடங்களில் மூன்று இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு இடம் விரும்புகின்ற சின்னத்திலும் போட்டியிடலாம் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க வைகோ அவர்களுக்கு விருப்பமில்லாத செயலாக இருப்பதினால் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது வைகோவும், அவரது மகன் துரைவைகோவும், திமுக பேச்சுவார்த்தை குழுவினர் முன் தோன்றுவதற்கு விரும்பாமல் மதிமுக நிர்வாகிகளை பேச்சுவார்தைக்கு அனுப்பிவைத்து தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு திரைப்பட பாடலை குறிப்பிட்டு உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன் என்பது தான் எங்கள் நிலை என்று அதிமுக நிர்வாகிகள் பகிரங்கமாக கருத்தை வெளியிட்டது மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் மத்தியில் மட்டும் மல்லாமல் வைகோ ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறவேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லையென்றாலும், அவரது உறுதியான வேகமான முடிவு என்பது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் அவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக அமைந்தது மட்டும் அல்லாமல் தோழமை கட்சிகளை உற்சாகப்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக பேசப்படுவதாக தேர்தல் பிரச்சாரத்திற்கும், விரைந்து சென்று தனது வெற்றிக்கான வழியை அடைவதற்கு ஏதுவான வழியை இரண்டு கட்டங்களாக அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலையும், வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் களத்தை சூடேற்றி உள்ளார் என்றே கூறவேண்டும்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜான்பாண்டியன்), தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் திருப்தி அடைந்து இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுக்கப்பட்ட 27 இடங்களில் ஒருசில இடங்கள் ஏற்புடையதாக இல்லை என்று சலசலப்பு ஏற்பட்டாலும் அண்ணாமலை போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போல் செயல்படுவதும், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்பதை தெரிவிப்பதும், அந்த கட்சிக்குள் ஒருவித சலசலப்பை தோற்றுவித்தாலும், டெல்லி மேலிடம் அவற்றையெல்லாம் சரிசெய்து கூட்டணியை வெற்றிகரமாக வழிநடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் தமிழர் கட்சி சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இலவசங்களை வெறுப்பதும், மக்கள் தேவைகளை கொடுப்பதிலும் தாங்கள் முன்னணியில் இருக்கிறோம் என்று எடுத்துக்கூறி மக்களை கவர்கின்ற விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் முன்வைக்கும் சில கோரிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்-று உற்சாகத்தை தந்தாலும், தனித்து போட்டியிடும் என்ற முடிவில் பின்வாங்காமல் நிற்பது வெற்றியை தரவில்லையென்றாலும், கட்சி சின்னத்தை தமிழ்நாட்டு மக்கள் மனதில் கொண்டு செலுத்துவதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் இடம் பிடித்துள்ளார் என்றே கூறவேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் 18 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவியையும், பெற்றுக் கொண்டு கூட்டணியை வழிநடத்தும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளிலாவது வெற்றிவாகை சூடவேண்டும் என்று கட்சியினரிடம் எடுத்துக் கூறி அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார். கடந்த முறை 23 தொகுதிகளை பெற்று 5 தொகுதிகளை மட்டுமே வெற்றிப் பெற்றோம். இந்த முறை கட்சிக்குள் தந்தை மகன் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நமது வெற்றியை எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் முழு வெற்றியை பெறுவதற்கான முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவு விட்டுள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

இப்படி தமிழக அரசியலில் பல்வேறு சூழ்நிலைகள் நிலவி வந்தாலும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் விசித்திரமான தேர்தல்களாகவும், வித்தி£சடான அணுகுமுறையும் தோழமை கட்சிகளையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் முழு திருப்தி அடையாமல் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது சிலகட்சிகளுக்கு வெற்றியையும், சில கட்சிகளுக்கு தோல்வியையும் ஏற்படுத்தலாம். ஆனால் இதையும் மீறி கூட்டணியில் ஆட்சி என்ற முழக்கத்திற்கும் வழிவகுக்கலாம். அல்லது ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம். இதை தாண்டி யோசித்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதிக்கமும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பும், உருவாகலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.
– டெல்லிகுருஜி