April 12, 2025

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 60,405 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 442 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,55,319 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.