சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம் இந்த திரைப்படத்தை தயாரித்தவர் ஜோதிகா, சூர்யா, எழுத்து இயக்கம் ஞானவேல் ராஜா. இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் நடந்துள்ள ஒரு உண்மை சம்பவத்தை வைத்து தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் திரைப்படம் உண்மையை மறைத்து உண்மைக்கு புறம்பான காட்சிகளை படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ராஜாகண்ணுவாக கதாநாயகனும், அவரது மனைவியாக சிங்கேனியாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இருளர் (குறவர்) சமுதாயத்தை சேர்ந்தவர்கள். பு990 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக சந்துரு இருந்த பொழுது விழுப்புரம் மாவட்டம் முதனை மலை கிராமத்தில் வசிக்கும் பார்வதி என்னும் இருளர் (குறவர்) என்னும் பெண்ணுக்காக நடத்திய சட்டப் போராட்டத்தின் கதையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட இருளர் இன பெண்ணுக்காக நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றம் வரை சென்று போராடியவர் வன்னியர் இனத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன் என்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். பழங்குடியின இளைஞரின் சாவுக்கு நீதிகேட்டு பு6 ஆண்டுகள் நெடும் போராட்டம் நடத்தினார். இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடி கொண்டிருப்பேன். அதற்கு முன்பாக நான் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன் என்று சபதம் எடுத்து கொண்ட அவர் இளைஞரான கோவிந்தன் 39&ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.
இருளர் பெண்ணின் கணவருக்கு நடைபெற்ற கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டி காவல்துறையின் அத்துமீறலையும், அடக்குமுறையையும் நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் வன்னியர் என்பது முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது ஜெய்பீம் திரைப்படத்தில். இருளர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து கொலை செய்து தமிழ்நாட்டின் எல்லைக்கும், பாண்டிச்சேரி எல்லைக்கும் நடுவில் வீதியில் தூக்கியெறிந்து வழக்கை மூடி மறைக்க பார்த்தவர் அந்தோணிராஜ் என்ற தலித் வகுப்பை சேர்ந்த சப்&இன்ஸ்பெக்டர் என்பதையும் ஜெய்பீம் சினிமா படத்தின் திரைக்கதையில் மறைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் பொழுது இருளர் இன சமுதாய மக்களுக்கும் வன்னியர்களுக்கும் விரோதம் இருப்பதை போல் காவல்துறை அதிகாரியை வன்னியராக உருவகப்படுத்தப்பட்டு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது பெரும் கண்டனத்துகுரியதாகும். அதே போல் திரைப்படத்தின் ஒரு காட்சியை வன்னியர் சங்கத்தின் அக்னிகுண்டம் படம் காலண்டரில் இடம் பெற்றதை போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் கண்டனத்திற்குரிய விஷயம். தற்பொழுது காலண்டரில் படம் மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதுவே ஒரு ஆதாரத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பாம்பே வை சேர்ந்த ஜோதிகாவும் (முஸ்லிம்), தமிழ்நாட்டை சேர்ந்த சூர்யா (கொங்கு வேளாளர்) இருவரும் திரைப்படத்தில் நடித்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். நிலைமை இப்படி இருக்க உண்மையை மறைத்து திரைப்படம் தயாரித்து தங்கள் வருமானத்தை பெருக்குவதற்கு பெரும்பான்மை சமுதாயத்தின் பொதுநல சேவையையும் மக்கள் தொண்டினையும், மறைத்து உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை உண்மை சம்பவம் என்று திரைப்படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் தொழிலில் பிரபல நடிகர் சிவக்குமார் மகனான சூர்யா ஈடுபட வேண்டிய அவசியம் என்ன. தமிழகம் முழுவதும் தலித் சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு வன்னியர்கள் வசிக்கும் பகுதிகளில் பல இடங்களில் சிலை வைத்து தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தவர் வன்னியர் சங்கம் பாமக கட்சி சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களும் பெரும்பான்மை வன்னியர்களும் ஆவார்கள்.
தொல் திருமாளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன், வடலூர் சாமிதுரை, திண்டிவனம் ஸ்ரீராமலூ போன்ற தாழ்த்தப்பட்டவர்களை வன்னியர் சங்க மேடைகளில் அமரவைத்து அழகு பார்த்தவரும், அங்கீகாரம் தந்தவரும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்பது வரலாறு. இப்படி வரலாறு இருக்கும் பொழுது விஞ்ஞானம் வளர்ந்து வரும் இந்த தருணத்தில் ஒரு திரைப்படத்தின் மூலம் அதில் வரும் காட்சிகளினால் ஒரு மிகப் பெரும் சமுதாயத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற செயலில் ஈடுபட்டிருக்கும் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, சூர்யா ஆகியோரின் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவையாகும்.
சினிமா என்பது அதில் வரும் காட்சிகள் அமைப்பும் கற்பனையாக இருந்தாலும் காசுக்காகவும், விளம்பரத்திற்காகவும் அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காகவும் உண்மையை மறைத்து பொய்யை பரப்பு-ம் முயற்சியில் இனிமேல் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கருத்தை பதிவு செய்கிறோம். இந்த கதையின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களும் இதற்காக வருத்தப்பட வேண்டியது அவசியமாகும். வன்னியர்கள் புரிந்து கொண்டார்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் தலித்துகளும் இருளர் மக்களும் என்பதை நினைவுப்படுத்துகிறோம்.
திரைப்பட தணிக்கை குழுவினர் இதில் கவனம் செலுத்தாமல் போனது ஏன்? என்பது கேள்வி எழுகிறது.
– சினிமா விமர்சனம்
More Stories
உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை