பொருளாதார ரீதியாக வளமான இந்தியா, சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க பாலகங்காதர திலகர் முயன்றார்.
சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நாட்டிற்கு செய்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பாலகங்காதர திலகரின் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்த கருத்துக்கள் தொடர்ந்து பலரை ஊக்குவித்து வந்தது. அவர் நடத்திய நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி அவரை நான் வணங்குகிறேன்.
தற்போதைய சூழ்நிலைகளில் அவருடைய எண்ணங்களும், கொள்கைகளும் மிகவும் பொருத்தமானவை. பொருளாதார ரீதியாக வளமான இந்தியா மற்றும் சமூக ரீதியாக முற்போக்கான பாரதத்தை உருவாக்க அவர் முயன்றார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!