மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு, தடுப்பூசி விநியோகம் மற்றும் முக்கிய விவகாரங்களில் திமுகவின் நிலைப்பாடு குறித்தும், பாராளுமன்றத்தில் திமுக செயல்படும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளை பாராளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்குவார் என தெரிகிறது.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!