April 19, 2025

அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு- தமிழக அரசு உத்தரவு

புகார் பதிவேட்டு முறையை உடனடியாக அமல்படுத்த நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் புகார்களை பதிவு செய்ய பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய வழியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் பதிவேடு முறையை கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.

  • பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • நடைமுறையில் உள்ள இணையவழி புகார் தெரிவிக்கும் முறையுடன் பதிவேடு முறையையும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • புகார் பதிவேட்டு முறையை உடனடியாக அமல்படுத்த நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இணைய வழியில் புகார் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக, ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூறியதால் புகார் பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.