சென்னை: விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.

More Stories
ஒருநாள் தரவரிசை பட்டியல் – நம்பர் ஒன் இடத்தை இழந்தது இந்தியா
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்கள் – சச்சின் சாதனையை தகர்த்தார் விராட் கோலி
ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 22-ந்தேதி ஆலோசனை