வன்னியர்களே வாழகற்றுக் கொள்ளுங்கள்! இனி வருங்காலம் உங்களுக்கான மாற்றம் தரும். அதுவே ஏற்றம் தரும் காலமாகட்டும்.
நாடு விடுதலை பெற்றும் எழுபத்தைந்து ஆண்டு காலம் சுதந்திர இந்தியாவில் பிறந்தோம், வாழ்ந்தோம் என்று மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம்.
ஆனால்! சமுதாயம் சீர்கெட்டுப் போனதற்க்கு நீங்கள் காரணம் இல்லை!
நம்மை வழிநடத்துவதாக கூறிய சில தலைவர்கள் நல்லவர்களாக இருந்து மறைந்து விட்டார்கள். அப்படிப்பட்ட தலைவர்களை நாம் நினைவில் வைத்திருக்க இயலாமல் போய்விட்டது.
பல தலைவர்கள் தாங்கள் வாழ்வதற்கு நம்மை பயன்படுத்திக் கொண்டு உங்களை விற்று விட்டார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.
இன்றும் பதவிக்கு சலாம் போடும் பலர் நம் சமுதாயத்தில் இருந்துக் கொண்டு, நம் மக்களை பற்றி கவலைப்படாமல், அடிமைகளாய் வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.
பலர் மானத்தை இழந்து, சுதந்திரத்தை பறிகொடுத்து சுயமரியாதையை காற்றில் பறக்கவிட்டு, தனிமனித உணர்வுகளை கூட துறந்து தலைவனுக்கு விஞ்சாமிர்தம் வீசிக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.
இதைத் தான் மகாகவி பாரதி சொன்னான்.
ச்சி ச்சி நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்று
சாதியை பற்றி பேசினால் சாமி குற்றம் வராது. ஆனால் கட்சி தலைமையும் கட்சி தலைவரும் கோபித்துக் கொள்வார்கள் என்று சமாதானம் சொல்லி நம் வாழ்க்கையை முன்னேற விடாமல் தடைப்போடும் வன்னியர் தலைவர்கள் இன்றும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பல கோடிஸ்வரர்களும், சில லட்சாதிபதிகளும் இறந்து போனால் இரங்கல் கூட்டம் போடுவதற்கு கூட ஒருவர் முன்வரமாட்டார் இப்படிப்பட்ட தலைவர்களுக்கு.
ஆனால்! தான் ஆடவில்லை என்றாலும் தன் தசையாடும் என்று, அப்பாவி வன்னியர்கள் ஒப்பாரி வைத்து அழுது புலம்புவார்கள். நம் இனத்தில் ஒருவர் இப்படிப்பட்ட துயரத்தில் சிக்கிவிட்டாரே என்று அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கிறது.
உன் அழுகை இவன் (வன்னியர் தலைவன்) காதிலும் விழாது. அவன் (ஆட்சியாளர்) காதிலும் விழாது. பட்ட குத்து தேவருக்கே! உலகம் வேடிக்கை பார்த்து மகிழும்.
“எட்டி பழுத்தால் என்ன ஈய்யாதவன் வாழ்ந்தால் என்ன?” என்ற பழமொழி நினைத்து நினைத்து விலகி நின்று வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கை நலமாகும். உங்கள் மனசும் தூய்மையாகும். குடும்பம் மகிழ்ச்சியடையும், பிள்ளைகள் வளர்ச்சியடைவார்கள்.
அடுத்தவனை நம்பி வாழாதே தலைவனை நம்பியோ, பணக்காரன் இருக்கான் வாழவைப்பவன் என்றோ நம்பி வாழாதீர்கள். இவர்களெல்லாம் தான் வாழ பிறரை விற்று பிழைப்பு நடத்துவார்கள்.
ஆத்திரம் கண்ணை மறைக்கும் பொழுதெல்லாம், அமைதியாய் இருங்கள். அவமானம் ஏற்படும் போதெல்லாம் தாங்கிக் கொள்ள பழகிக் கொள்ளும் பக்குவத்தை -ஏற்படுத்துங்கள்.
“நன்றி மறவாத நல்ல குணம்
அதுவே நம் மூலதனம்
நன்றி மறந்தவன்-
நாளை உணர்வான்!
உங்களுக்காக பேசுகிறேன்
உங்களோடு பேசுகிறேன்!
இருப்பவனை நம்பாதே
பிறப்பவனை நம்பு!
– பெருந்தமிழன்
More Stories
மன அமைதி
ஆட்சியில் பங்கு வேண்டும்… குரல் எழுப்பும் தோழமை கட்சிகள் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை… திமுக – அதிமுக உறுதி…!
எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட சுற்றுப்பயணம்…
நம்பிக்கை தருகிறது