அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கி வைக்கப்பட்டவர்கள், அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று தனது கருத்தை செய்தியாளர்கள் முன்பாக தெரிவித்துள்ளார். கூடவே விரைவாக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் குறிப்பாக பத்து நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கெடுவிதித்துள்ளார்.
பிரிந்தவர்கள் யார்? கட்சியிலிருந்து விலகியவர்கள் யார்? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பெயர் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக பிரிந்தவர்கள் ஒன்றுசேர்ந்தால் தான் அதிமுக அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கூறுகிறார். இதற்கு ஒத்துவரவில்லையென்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேளையில் நான் ஈடுபடுவேன் என்று கூறுகிறார். இதை தான் சசிகலா அவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார். ஆகவே இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆரம்பத்தில் இருந்து சசிகலாவின் ராஜவிசுவாசியாகவே செங்கோட்டையன் இருந்து வருகிறார் என்பது தெளிவாகிறது.
ஆனால் எடப்பாடி கூடவே இருந்து கொண்டு இப்படி பலர் செயல்படுவதை எடப்பாடி பழனிசாமி ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் டி.டி.வி.தினகரன் அதிமுகவை விட்டு வெளியேறிய பிறகு அல்லது வெளியேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது என்னுடைய சிலிப்பர் செல்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்ற அடிக்கடி கூறிவந்தார். இப்பொழுது தான் தெரிகிறது செங்கோட்டையனும் சிலிப்பர் செல்லாக இருந்துவந்திருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் எத்தனை சிலிப்பர் செல்கள் எடப்பாடியோடு இருக்கிறார் என்பதை போக போக தான் புரிந்துகொள்ள முடியும்.
பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா, ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், ஆகியோர் பெயர்களை கூட செங்கோட்டையன் உச்சரிக்காமல் ரொம்ப ஜாக்கிரதையாக ஒருங்கிணைந்தவர்கள், பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். பத்துநாள் கெடுவிதித்துள்ளார். செங்கோட்டையன் பேட்டி கொடுத்த மறுநிமிடமே கூட்டணி கட்சி தமிழ்நாடு தலைவரான பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையன் பேட்டியை வரவேற்கிறார். அதே போல் ஒ.பன்னீர்செல்வம் எனது மனதின் குரலாக செங்கோட்டையன் பேசுகிறார் என்று கூறுகிறார். மனம் திறந்து பேசிய செங்கோட்டையன் தனக்கு பின்னால் மறைந்து இருக்கும் மர்மங்கள் குறித்து ஏன் பேச மறுக்கிறார்.
– டெல்லிகுருஜி
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
சென்னை மாநகரக் காவல்துறை – வாகனங்களுக்கான விதிமீறல் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்: