April 12, 2025

வலிமை ரிலீஸ் – போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதை போஸ்டர் ஒட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘வலிமை’ திரைப்படத்திற்கு சென்சாரில் தணிக்கைக்குழு ‘யு/ஏ ‘சான்றிதழ் வழங்கியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘வலிமை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் வேட்டி சட்டையில் அஜித் நடந்து வரும் புகைப்படத்தோடு, “உலகநாடுகள் எதிர்பார்க்கும் வலிமை” என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.