உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆனார். தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி பாராளுமன்றம் வருவதாக காங்கிரஸ் சார்பில தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். பாராளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அழைத்து சென்றனர். அதன்பின் ராகுல் காந்தி மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
More Stories
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
வருவாய் பற்றாக்குறையில் இரண்டாமிடம்:
உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின்தங்கிய தமிழ்நாடு,
நிர்வாகம் தெரியாத திமுக அரசு!-
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்