தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்கிற்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கதைகளத்துடன் உருவாகி உள்ள இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.
More Stories
உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை