April 16, 2025

திண்டிவனம் க.ராமமூர்த்தி முன்னாள் எம்.பி.

[responsivevoice_button voice=”Tamil Male”]இன்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிமுறையும், சீர்மிகு நிர்வாக திறமையும் தமிழகத்தில் இன்னொரு பொற்காலம் நடைபோட துவங்கிவிட்டது என்பதை காட்டுகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நின்று ஒத்துழைத்தது ஆனால் இன்றோ மத்தியில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை வைத்துள்ள நிலையில் தமிழக ஆட்சியை எதிரியாக நினைக்கிறதே தவிர ஆதரவுக் கரம் நீட்டவில்லை இந்த நிலையில் சவால்களை சமாளித்து மிகுந்த தன்னம்பிக்கையோடு ஆட்சியை வழிநடத்துவது என்பது எளிதல்ல இன்றைய முதலமைச்சர் அதனைச் செய்துவருகிறார்.

தமிழகத்தில் வரலாறு காணாத கடும் புயல் வீசியது “தானே புயல்” என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல் கடலூர் மாவட்டத்தை முழுமையாக சீரழித்து கடலூர் நகரை பாழாக்கி தன் கைவரிசையை விழுப்புரம் மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் காட்டி மறைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சுருதி வேண்டும். முதலமைச்சரின் இந்த பகுதிக்கான மறுவாழ்வு பணிகள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பணியாற்றியவன் என்கிற வகையில் என்னை பிரமிக்க வைக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கும் சீராகவும், தடையில்லாமல் விரைவாகவும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய மாவட்ட ஆட்சி தலைவர் என்கிற அந்தஸ்தில் உள்ள மூவரை கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பிவைத்து மாவட்டத்தை பல பகுதிகளாக பிரித்து பணிகள் தடையின்றி, ஊழலின்றி நடைபெற வேண்டும் என்று பணித்தது எவரையும் வியக்க வைக்கும். அங்கே, இங்கே என்று கூறப்படுகிற குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக எழுகின்றனவே தவிர எங்கே, எந்தப் பகுதியில் என்ற விவரங்களை இன்றுவரை எவரும் தரவில்லை.

இந்தியாவின் முந்திரி கள…சியமாக விளங்குவது கடலூர் மாவட்டம். அங்கு முந்திரி மரக்காடுகள் வேரடி மண்ணோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம் என்று ஏங்கி நின்ற முந்திரி விவசாயிகளுக்கு ஜெயலலிதாவின் அரசு யாரும் நினைத்து பார்க்காத நிவாரணத்தை அளிக்க முன்வந்தது, முந்திரி தோட்டங்களுக்கு நட்ட ஈடு பணமாக கொடுத்தது போக, உங்கள் முந்திரி தோட்டத்தை மீண்டும் உருவாக்க வீரியவகை முந்திரி கன்றுகளை அரசே தரும் அதோடு நில்லாமல் ஓராண்டுகாலம் அந்த முந்திரி கன்றுகளை அரசே தரும் அதோடு நில்லாமல் ஓராண்டுகாலம் அந்த முந்திரி கன்றுகளுக்கான பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு எவரையும் மலைக்க வைக்கிறது. கடலூர் நகரத்தின் சீரழிவு அதன் சாலைகளை சீர்குலைத்து, கான்கிரீட் மின்னினைப்பு கம்பங்களை உடைத்து சாய்த்தது. சாலையோர மரங்கள் பாதையை மறித்து வீழ்ந்தன. கடலூர் கடலோர பகுதி மீனவர் வாழ்விடங்கள் பாழாகின, மீன்பிடி படகுகள் நொறுங்கின, மீன்பிடி படகுகள் நொறுங்கின, மீன்பிடி வலைகள் சுக்கு நூறாக அருந்துபோயின. அஞ்சாதீர்கள் என் அரசு உங்களை வாழ்விக்கும் என்று சொல்லுகிற மனத்தெளிவு முதலமைச்சருக்கு இருந்தது.

புயலடித்த 20 நாட்களில் “தை” பொங்கலை முன்னே வைத்து கடலூர் நகரத்தில் மின்வசதி சீர்செய்யப்படும், வீடுகளிலும், தெருக்களிலும், மின்விளக்குகள் எரியும் என்று அறிவித்தார். செயல் நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்திலிருந்து 22000 கான்கிரிட் மின்சார கம்பங்களை ஒரே நாளில் வாங்கி குவித்து வேலையை துவக்கினார். மாநிலம் முழுக்க இருந்த மின்சார துறையை சேர்ந்த பணியாளர்களை கடலூர் மாவட்டத்தில் குவித்து நிலமையை சீர் செய்யப்பணித்தார். அப்போதும் அங்கே, இங்கே என்று மின் இணைப்புக்கான கம்பங்களையும், தளவாடங்களையும் வழிமறித்து முதலில் எங்களுக்கு என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்டவர்கள் வைத்தார்கள். கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மிகுந்த வேதனையோடு “லாரிகளையெல்லாம் தயவு செய்து மறிக்காதீர்கள் வேலையை நடக்கவிடுங்கள்” என்று கோரியது நினைவிற்கு வருகிறது. தூண்டிவிட்டவர்கள் காணாமல் போனார்கள். பொங்கல் அன்று கடலூருக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் வாக்கு நிறைவேறியது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அமைச்சர்கள் பணிகளை விரைந்து முடிக்க தாங்களே அலைந்து திரிந்து பணியாற்றியதைப் பார்க்க முடிந்தது. இதுபோன்ற புயலும், வெள்ளமும், வறட்சியும் காமராஜர் ஆட்சி காலத்தில் த…சையிலும், திருச்சியிலும் மற்ற மாவட்டங்களில் ஏற்பட்ட போது அவர் தலையிலே தலைப்பாகை கட்டிக்கொண்டு வேதனைப்படுவோரின் மத்தியில் நின்று சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டார். அதுபோலவே இன்றைய முதலமைச்சர் பணிகளை விரைந்து முடித்துக் கொண்டிருக்கிறார். கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத சாலையில் நேரில் வந்து பார்க்கவேண்டும் என்பது ஒரு தரமான விமர்சனமாகாது. இதோ நானும் உதவப்போகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தன் கட்சியின் சார்பாக நிவாரண பணிகளுக்கு தமது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வசம் ரூபாய் 50 லட்சம் கொடுத்து நிவாரண பணிகளை செய்ததாக அறிவித்தார். எப்படி அந்தப்பணம் செலவாயிற்று என்று சொல்ல இயலவில்லை. இன்றைக்கு அவர் அரசு பணிகளை விமர்சிப்பது வேதனையை தருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா பொறுப்பேற்ற நாள் முதல் செய்துவரும் அறிய பணிகளான காவேரி நதிநீர் பிரச்சனை, இலங்கை மீனவர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனை, கூடங்குளம் அனுமின்நிலையம் பிரச்சனை போன்றவற்றில் மத்திய அரசையும் தாண்டி நின்று தமிழகத்தினுடைய உரிமைக்காக குரல்கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார். தமிழக நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, தமிழக அரசு தேர்வாணைய தலைவர் நியமனம் பல்வேறு நடவடிக்கைகள் என தொடர்கிறது.