வீரத்தையும், விவேகத்தையும் ஒன்றிணைத்து இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் என்பதை பார்த்த பிறகு பாகிஸ்தான் நாடு என்பது இந்தியாவின் எதிரி என்பதை மறந்து தீவிரவாதிகளின் நண்பன் என்பதை விடுவித்துக் கொண்டு ஒரு முழுமையான இசுலாமிய நாடாக குரான் மீது நம்பிக்கை வைத்து உலக நாடுகளுடன் சகோதர பாசத்தை வெளிப்படுத்துவதுடன், தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதே எதிர்கால பாகிஸ்தான் நாடு நல்வழி பாதையில் பயணிக்கும் என்பதற்கு வழிவகுக்கும் இந்தியா என்ற மதசார்பற்ற நாடு இருப்பது உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் கொண்டது என்பதனை உலகம் அறிந்துள்ள செய்தியாகும்.
ஆனால் பாகிஸ்தான் என்ற இசுலாமிய நாடு தீவிரவாதிகளை ஊக்குவித்து, வருவதுடன் இந்தியாவை எதிரி நாடாக கருதி மறைமுக தாக்குதல் நடத்துவதும், அப்பாவிகளை படுகொலை செய்து அதனை கொண்டாடி மகிழ்வதும் ஏற்புடையது அல்ல!
இத்தகைய செயல் என்பது கடும் கண்டனத்துக்கு உரியது மட்டுமல்ல உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தான் தனித்து விடப்படுவதற்கு வாய்ப்பாகவே அடைந்து விடும்.
தீவிரவாதம் என்பது விஷயத்தை விடவும் கொடிய ஆயுதம், மனிதன் உயிர் என்பது சாதாரண விஷயமல்ல காலம் முழுவதும் மனித நேயத்தையும், சகோதரத்தையும் உள்ளடக்கிய அருமருந்தாகும். இத்தகைய மருந்து அழிந்து போனதால் உலகம் அழிந்து போகும் நாடு அழிந்து போகும், மனிதநேயம், சகோதரத்துவம் அழிந்து போகும், இறைகுணம் அழிந்து போகும்.
பகல்காம் தாக்குதல் என்பது மனிதநேயம் அற்ற செயல் என்பதை உரையாமல் பாகிஸ்தான் இந்தியா மீதும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த நினைப்பது கோழைத்தனம்.
இந்தியாவின் வீரத்தையும், நல்லெண்ணத்தையும் சோதித்து பார்க்க நினைப்பதும், இந்திய ராணுவத்¬¬ சீண்டிப் பார்க்க எண்ணுவதும், தங்கள் வீட்டுக்கு தாங்களே தீயிட்டுக் கொள்ளும் செயலாகும். இது மட்டுமல்ல பாகிஸ்தா-னுக்கும், அந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கொள்ளி வைக்கும் செயலாகும்.
பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போது பாகிஸ்தான் வாலாட்டக் கூடாது.
இந்தியா உலக அரங்கில் நட்புடன் வலம் வந்துக் கொண்டிருக்கும் போது அதை உணர்ந்து நடந்து கொண்டால் பாகிஸ்தானுக்கு நன்மை கிடைக்கும் கூடவே நட்பும் கிடைக்கும். இதை உணராமல் இந்தியாவுடன் மோதி பார்க்க நினைத்தால் பிரதமர் மோடி தனது ராஜதந்திரத்தை பயன்படுத்துவதுடன் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும்.
பிறகு என்ன சோத்துக்கே பஞ்சம் வரும் பாகிஸ்தானுக்கு பொருளாதார தடைவந்தால், கடன் வாங்கும் சக்தியும் இல்லாமல் போகும் எல்லா வகையிலும் இழப்பு ஏற்பட்டு நாட்டை அடகு வைத்து எத்தனை நாட்கள் வாழமுடியும்?
போர் நிறுத்தம் பாகிஸ்தான் மக்களுக்கும் இந்திய ராணுவத்துக்கும் மட்டுமே, தீவிரவாதத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் எப்பொழுதும் போர் நிறுத்தம் என்பது இல்லை என்பதை இந்தியா உறுதிப்பட கூறிவிட்டது.
உணர்ந்து நடந்தால் நன்மை! உணராமல் போனால் பாகிஸ்தானுக்கு நடப்பதெல்லாம் தீமையாகவே போகும்! இந்தி மக்கள் மீதும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் செயல்படுவதை இன்றே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்தியாவின் மக்கள் விருப்பம், இதுவே பிரதமர் மோடியின் விருப்பம். சிறுபான்மை என்ற ஒற்றை வரிக்கு மதிப்பளிக்கும் இந்தியா, பெரும்பான்மை மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உண்டு என்பதை நிரூபிக்கும் கடமை உண்டும்.
இந்தியா மதசார்பற்ற நாடு அதே நேரம், ஒரு மதத்திற்கு மட்டும் பயந்த நாடு அல்ல! குறிப்பாக தீவிரவாதிகளுக்கு ஜெய்ஹிந்த்!
More Stories
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உச்சபட்ச தண்டனை இதுதான்!
அரசு வழக்கறிஞர் விளக்கம்
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி – அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா!