May 9, 2025

தமிழ்நாடு நிதி நிலையில்
திட்டமும் நிதி ஒதுக்கீடும்…!

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, சு0சு5-சு6-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை,
சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளி நடப்பு செய்தார்கள். பின்னர் நிதி அமைச்சர் அவர் ஆற்றிய உரையில் உள்ளது

*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம், கடலூர்,
நெல்லையில் ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகங்கள் அமைக்கப்படும்.தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

*பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க பு4 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்
பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி
உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும் . துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியை உருவாக்கிட ரூ.சு9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். *அண்ணா பல்கலை. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே சிறந்த பல்கலை.யாக மாற்ற ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. *நாட்டில் முதல் பு0 இடங்களில் அண்ணா பல்கலையை இடம்பெறச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய சட்டப் படிப்புகள்
அறிமுகம் செய்யப்படும்.

*பொறியியல், வேளாண்மை படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் பயிலும் மாணவர்

கல்வி செலவை ஏற்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள் அதிகம் விரும்பி சேரும் பாடப் பிரிவுகளில் பு5,000
இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்

  • கு ன் னூ ர் , சன்னை ஆ ல ந் தூ ர் உள்ளிட்ட 8 இடங்களில் புதிய அரசு கலைக்
    கல்லூரிகள் அமைக்கப்படும். முத்துப்பேட்டை பெரம்பலுர். மானாமதுரை, திருவிடைமருதூர் ஒட்டப்பிடாரத்திலும் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • திசையன்விளை, ஏம்பல், செம்பனார் கோவில், தா.பழூர், மணப்பாறை. காங்கேயம் திருச்செங்கோட்டில் ரூ. 152 கோடியில் 10 புதிய அரசு ஐடிஐக்கள்.
  • தொழிவாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ. 1975 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு
  • 10 , 0 0 0 பு தி ய ம க ளி ர் சு ய உ த வி க் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உயர் கல்வியில் சேரும் மாணவிகள் சதவீதம் 19ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடி மதிப்பீட்டில் 3 மாணவியர்கள் விடுதிகள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 570 கி.மீ சாலைகள் ரூ.486 கோடியில் தரம் உயர்த்தப்படும். கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடியிலும் மதுரை மாநகராட்சியிலும் ரூ130 கோடியிலும் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
  • சென்னை கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க
    ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர்கள் வருகை, ஊட்டச்சத்து, கற்றல் திறன் மேம்பட்டுள்ளது.