October 16, 2025

தங்க மார்க்கெட்டில் வரப் போகுது பூகம்பம்! நிபுணர்கள் கொடுத்த வார்னிங்!

உலக சந்தையில் தங்க விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு அவுன்சுக்கு (10 கிராமுக்கு) 4,000 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் நடப்பு நிதியாண்டில் தங்கத்தில் விலையில் 37.5% ஏற்றத்த ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் இந்தியாவில் தங்க விலை 6% உயர்ந்துள்ள நிலையில், விரைவில் தங்கத்தின் விலை சரிவைச் சந்திக்கலாம் என சொல்லப்படுகிறது.

உலகளவில் தங்க விலை அதிகரிக்க காரணமாக அமெரிக்கா அரசின் நிதி நிலை, இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி முயற்சிகள், மற்றும் டாலர் மதிப்பு ஆகியவை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில் டாலர் இண்டெக்ஸ் மதிப்பு இரண்டு மாதங்களில் உயர்ந்து 99 என்ற நிலைக்கு வந்துள்ளது.

இதனால், உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் முதலீட்டார்களுக்கு லாபம் வரு சூழல் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக Ya Wealth Global நிறுவனத்தின் இயக்குநர் அனுஜ் குப்தா கூறும் போது ” டாலர் இண்டெக்ஸ் இந்த வாரம் 1.27% உயர்ந்து 98.7-ல் அருகே உள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளியில் லாபம் எடுப்பதற்கான முதல் சிக்னல்.” என்கிறார்.

அதே நேரத்தில், அமெரிக்கா அடிப்படை ஆல்கோனோமிக் நிபுணர் நிகம் அரோரா கூறியதாவது, “தங்கம் மிகவும் அதிக விற்பனை (overbought நிலையில் உள்ளது, இதனால் விரைவில் சரிவைச் சந்திக்கும் நிலை (pullback நிகழக்கூடும். அமெரிக்கா அரசு ஷட்ட்டவுன் முடிவு, மத்திய பெடரல் வங்கி வரிவிதிப்பில் மாற்றம் செய்யாதது மற்றும் பாண் லாப உயர்வு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளது’ என்றார்.

உலகளவில் பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் bond yield உயர்வும், புதிய அரசாங்கத்தின் நிதியியல் திட்டம் சரியான விதத்தில் செயல்படும் என்பதும் தங்க விலை சரிவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. வெள்ளி விலை தங்கத்தைவிட 1.7 மடங்கு வேகத்தில் சரிவடையும். அதாவது தங்கம் சரிந்தால், வெள்ளி விலை அதைவிட வேகமாக குறையும்.

இதுதொடர்பாக பேசியுள்ள Quantum AMC-யின் CIO சிராக் மெஹ்தா, “30%-க்கும் மேல் உயர்வுள்ள தங்கத்தின் overbought சந்தையில் 10-15% சரிவு நிகழலாம். இது ஆரோக்கியமான சரிவு எனக் கருதப்படுகிறது. ஆனால், முதலீட்டாளர்களின் அடிப்படை லாப மனோபாவம் இன்னும் தொடர்கிறது. இதன் மூலம், இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள், தங்கம் மற்றும் வெள்ளியில் விரைவில் வரக்கூடிய சரிவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • தொ