எடியூரப்பா கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
பாஜகவில் 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
பிற்பகலில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா அளித்ததாகவும் அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா ராஜினாமாவால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனது ராஜினாமா குறித்து பேசிய எடியூரப்பா, ‘அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, என்னை மத்திய மந்திரியாக பொறுப்பேற்கும்படி கூறினார். அப்போதும் கூட நான் கர்நாடகாவிலேயே அரசியல் பயணத்தைத் தொடர்கிறேன் என்று சொல்லிவிட்டேன். எனது அரசியல் வாழ்க்கை எப்போதும் அக்னிப் பரீட்சையாகவே இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காலம் என்பதால் மிகச் சவாலாக இருந்தது’ என்று தெரிவித்தார்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!