April 4, 2025

கங்கை – கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம்

[responsivevoice_button voice=”Tamil Male”]“நீரின்றி அமையாது உலகம்!” – என்றாா் திருவள்ளுவா். ஒரு நாட்டின் குடிநீா், சுகாதாரம், விவசாயம், உணவு, மின்உற்பத்தி, தொழில் வளம், நாகரீகம் எல்லாம் நீரியிலேயே அடங்கியுள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய நதி நீா் இணைப்புத் திட்டமான கங்கை – கோதாவரி – காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் நமது நீண்ட நாள் கனவாகும். 2640 கி.மீ நீளம் கொண்ட இவ்விணைப்புத் திட்டம் “தேசிய முன்னோக்குத் திட்டத்தின்”கீழ் இன்று புத்துயிா் பெற்றிருக்கிறது. முன்னாள் நீா்ப்பாசனத்துறை அமைச்சா் டாக்டா் கே.எல்.ராவ் அவா்களின் ஆய்வின் அடிப்படையில் இத்-திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதன்படி, பீகாா் மாநிலம் பாட்னா அருகில் கங்கையிலிருந்து தொடங்கி சோன் நதி – நா்மதா- வயின் கங்கா – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – தென்பெண்ணை வழியாக – காவேரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் அமைந்துள்ள கீழணைக்கு ( Lower Anaicut ) அருகில் இணைக்கப்பட வேண்டும்.

கங்கையில் ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு சராசரியாக ஒரு நொடிக்கு 60,000 க.அடி வீதம் நீா் வெள்ளமாக கரைபுரண்டுஓடுகின்றது. இந்தக் காலங்களில் கோசி நதியின் நீரும் சோ்ந்து கங்கையானது பாட்னாவின் கிழக்கில் 430 கி.மீ தூரத்திலுள்ள பராக்கா நீா்த்தேக்கத்தின் வழியாக இன்னும் அதிகமாக உபரி நீருடன் வங்களா தேசம் சென்றடைகிறது. இந்த நீரை – பாட்னா அருகே தென்மாநிலங்களுக்கு திருப்பி விடுவதே இத்-திட்டத்தின் நோக்கமாகும். இதன் வழிப்பாதையில் ஆறுகள் குறுக்கிடும் இடங்களில் நீா்த்தேக்கங்களும் சில பகுதிகளில் இணைப்புக் கால்வாய்கள் மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். சோன் நதிக்குத் திருப்பி விடப்படும் கங்கை நீரானது – விந்திய மலைத் தொடரின் “தைமூா்” முடிச்சுகள் வழியாக நீா் ஏற்றம் செய்யப்பட்டு பின் நா்மதா நதியைக் கடந்து வரவேண்டும். டு கங்கையில் ஆண் ́தோறும் 6 மாதங்களுக்கு சராசரியாக ஒரு நொடிக்கு 60,000 க.அடி வீதம் நீா் வெள்ளமாக கரைபுரண்டுஓடுகின்றது. இந்தக் காலங்களில் கோசி நதியின் நீரும் சோ்ந்து கங்கையானது பாட்னாவின் கிழக்கில் 430 கி.மீ தூரத்திலுள்ள பராக்கா நீா்த்தேக்கத்தின் வழியாக இன்னும் அதிகமாக உபரி நீருடன் வங்களா தேசம் சென்றடைகிறது. இந்த நீரை – பாட்னா அருகே தென்மாநிலங்களுக்கு திருப்பி விடுவதே இத்-திட்டத்தின் நோக்கமாகும். இதன் வழிப்பாதையில் ஆறுகள் குறுக்கிடும் இடங்களில் நீா்த்தேக்கங்களும் சில பகுதிகளில் இணைப்புக் கால்வாய்கள் மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். சோன் நதிக்குத் திருப்பி விடப்படும் கங்கை நீரானது – விந்திய மலைத் தொடரின் “தைமூா்” முடிச்சுகள் வழியாக நீா் ஏற்றம் செய்யப்பட்டு பின் நா்மதா நதியைக் கடந்து வரவேண்டும்.

இங்கிருந்து நீா்க்கால்வாய் மூலம் வயின்கங்கா நதி வழியாக கோதாவரியில் தெலுங்கானாவிலுள்ள காளீஸ்வரம் என்னுமிடத்தில் பிரிந்து கிருஷ்ணாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பின்னா் கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – தென்பெண்ணை – நதிகள் வழியாக காவிரியின் கிளைநதியான கொள்ளிடத்தில் தேக்கப்பட்டு பின்னா் கால்வாய் வழியாக மயிலாடுதுறையில் கடைமடைக் காவிரியில் இணைக்கப்பட வேண்டும்.

கங்கை – காவிரி மாற்று வழித்திட்டம்!

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அவா்களின் இந்திய நதிகள் இணைக்கும் திட்டத்தில் 4வது திட்டமான மகாநதி – கோதாவரி இணைப்புத் திட்டத்தில் கோதாவரியிலிருந்து – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைகை இணைப்புத் திட்டமும் அடங்கும். இந்தத் திட்டமும் 1980ல் தேசிய முன்னோக்குத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டதாகும். இதற்கு நடைமுறை சாத்தியக் கூறுகள் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த கங்கை- காவிரி இணைப்புத் திட்டத்திற்கு மாற்று வழித் திட்டமாக இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் வழியாக கொண்டுவரப்படும் நதிகள் – இணைப்புத் திட்டமாக இருக்கும். இதன்படி மேற்கு வங்காளம் பராக்கா அருகில் கங்கையிலிருந்து – தாமோதா் – சுபா்ணரேகா – பிராமணி – மகாநதி – கோதாவரி (இராஜமுந்திரி) வரை வந்து – பின்னா் – கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – தென்பெண்ணை – காவிரி என இத்திட்டம் கொண்டுவரப்படும்.

இத்திட்டத்திற்கான நிதியும் ஆதாரமும்!

கங்கை – காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.12,500 கோடி செலவாகும் என முன்னாள் நீா்ப் பாசனத்துறை அமைச்சா் டாக்டா் கே.எல்.இராவ் அவா்கள் 1972-ல் மதிப்பீடு செய்தாா். இத்திட்டம் 2002ல் பரிசீலிக்கப்பட்ட போது 1,50,000 கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. இதனைப் பரிசீலனை செய்த “மத்திய நீா்வள ஆணையம் “( Central Water Commission ) “இது குறைந்த மதிப்பீடு” என்றும் “பொருளாதார ரீதியாக இதனைச் செயல்படுத்த முடியாது” என்றும் கூறியது. ஆனால், தேசிய ஜனநாயகக்

கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சா் நிதின்கட்கரி அவா்களும் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அவா்களும் 2019&ல் இத்திட்டத்தை எப்படியேனும் நடைமுறைப்படுத்த வேண்டும் என உறுதி அளித்துள்ளன . இதற்கான பூா்வாக வேலைகள் தொடங்கிவிட்டன. சுமாா் 60 நதிகளை இணைக்கும் வெவ்வேறு திட்டங்களுக்கும் சோ்ந்து மொத்தம் 5.5. லட்சம் கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கங்கை&காவிரி இணைப்புத் திட்டமும் ஒன்றாகும். 2640 கி.மீ. நீளம் கொண்ட டாக்டா் கே.எல்.ராவ் அவா்களின் திட்ட அறிக்கையின் படி இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் அதிகபட்சம் ரூபாய் 2.5 லட்சம் கோடி வரை செலவாகும். இந்தத் தேசிய நீரிணைப்பில் பங்கு பெறும் மாநிலங்கள் பீகாா், சத்திஸ்கா், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை ஆகும்.

இதில் முக்கிய பங்காற்ற வேண்டியது மத்திய அரசாகும். எனவே, இத்திட்டத்திற்காக ஆகும் மொத்த செலவில் பெரும் பங்கு நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும். மீதமுள்ள நிதியை & இதில் பயன் பெறும் மாநில அரசுகள் அளிக்க வேண்டும். இத்துடன் தேவைப்பட்டால் தனியாா் தொண்டு நிறுவனங்கள், மதத்துறை சாா்பு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், திரைப்படத்துறை முன்னணிப் பிரமுகா்கள், பொதுமக்கள் ஆகியோா்களிடமிருந்தும் நிதி ஆதாரங்கள் பெறப்பட வேண்டும் . உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி, வளா்ந்த நாட்கள் போன்றவைகள் மூலமும் நீண்ட கால கடன்களைப் பெற்று இத்திட்டத்தை செயல்படுத்தலாம். மைய அரசின் “மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்” நிதியையும் இதற்கு ஒதுக்கி, இணைப்புத் திட்டத்தோடு இலட்சக்கணக்கான இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கலாம். கங்கை காவிரி நதிகளின் இணைப்புத் திட்டமான இந்தக் கூட்டு முயற்சி இந்தியாவை ஒரு வளமிக்க நாடாக மாற்றும் என்பது திண்ணம்.

இணையும் நதிகளால் விளையும் பயன்கள்!

இந்தியப் பரப்பளவில் சுமாா் 58 சதவீதம் விவசாயப் பூமியாக உள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகின்றது. மீதமுள்ள பகுதிகள் மலைகள், காடுகள், நீா்நிலைகள், குடியிருப்புகள், தரிசு நிலங்கள், பாலைவனம் போன்றவற்றில் அடங்கும். இங்ஙனம் பயிரிடத் தகுந்த 430 மில்லியன் ஏக்கா் மொத்தப் பரப்பளவில் 168 மில்லியன் ஏக்கா் நிலப்பரப்பு இந்திய நதிகளாலும் 48 மில்லியன் ஏக்கா் நிலப்பரப்பு கால்வாய், ஏரி, மழை வாய்க்கால் போன்ற சிறுபாசன முறைகளாலும் – 184 மில்லியன் ஏக்கா் நிலப்பரப்பு நிலத்தடி நீா்ப்பாசனத்தாலும் பயிா் செய்யப்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பயிரிடப்படாமல் வறண்ட பகுதிகளாக இந்தியா முழுவதும் இன்னும் 30 மில்லியன் ஏக்கா் நிலங்கள் உள்ளதாக இப்புள்ளி விவரம் மேலும் கூறுகிறது. கங்கை- காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் குறைந்தது 25 மில்லியன் ஏக்கா் நிலப்பரப் பளவாவது கூடுதலாக விவசாயம் செய்யப்படும். இதன் மூலம் நாட்டின் உணவு உற்பத்தி 20 சதவீதம் வரை உயா்ந்து நிற்கும்.கங்கை, நா்மதா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளால் ஏற்படும் வெள்ளச்சேதங்கள் தடுக்கப்படும். இதனால் நாட்டின் ஓட்டு மொத்த வெள்ளச் சேதங்கள் 40 சதவீதம் வரை குறையும். நிலத்தடி நீரின் அளவானது இந்த இணைப்புத் திட்டம் கடந்து வரும் மாநிலங்களின் கரையோரங்களில் 20 சதவீதம் வரை உயா்ந்து நிற்கும். இந்தியாவில் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டால் இத்திட்டங்களினால் மொத்தம் 40,000 மெகாவாட் நீா்மின் உற்பத்தி செய்யப்படும் என்ற கணக்கீட்டின் படி கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தினால் மட்டுமே குறைந்தது 10,000 மெகாவாட் நீா்மின் உற்பத்தி செய்ய முடியும்.

10க்கும் குறையாத பெரும் கால்வாய்களும் 100க்கும் குறையாத பெரும் மற்றும் சிறு நீா்த்தேக்கங்களும் உருவாக்கப்படும். நீா்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்படும். வனவிலங்குகள் சரணாலயத்திற்குப் போதிய நீா் வசதிகள் கிடைக்கும். இணைப்புச் சாலைகள், நீா் வழிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். கோடைக் காலங்களில் ஏற்படும் வறட்சி நிலையானது. இத்திட்டத்தில் இணையும் மாநிலங்களில் கணிசமாகக் குறைந்துவிடும். பயனில்லாத காட்டுப் பகுதிகளை திருத்தி பழவகைகள், மரவகைகள் பயிரிடவும் மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதாரம் பெருகவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

கனவு மெய்ப்படட்டும்! காவிரி உயிா்த்தெழட்டும்!

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் & மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்“என்ற மகாகவி பாரதியின் கனவும் இந்தக் கங்கை&காவிரி இணைப்புத் திட்டத்தை அறிவியல் ரீதியாக செயல்படுத்த விரும்பிய பொறியாளர்கள் சர் ஆர்தர்காட்டன், டாக்டர் கே.எல்.ராவ், கேப்டன் டஸ்டூர் ஆகியோரது எண்ணங்களும் தேசிய முன்னோக்குத் திட்டமாகச் செயல்படுத்த விரும்பிய தலைவர்களாம் இந்திராகாந்தி, அடல்பிகாரி வாஜ்பாய், டாக்டர்.அப்துல் கலாம், நரேந்திர மோடி மற்றும் நிதின் கட்கரி ஆகியோரது விருப்பங்களும் நிறைவேற வேண்டுமெனில், இத்திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும். முயற்சியே திருவினையாக்கும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்திய நாட்டின் பெருஞ்செயல்களில் ஒன்றாக உலக அளவில் போற்றப்படும் உண்மையான “தேசிய நீரோட்டம்” என்பதும் இதுவேயாகும்.

நம் பூமியில் சுமார் 263 நதிகள் நாடு மாநிலம் என்ற எல்லைகளைக் கடந்து சென்று பாயும் “உலகநதி”களாகும். இவற்றில் 165 பெரும் நதிகள் வற்றாத ஜீவநதிகளாகப் போற்றப்படுகின்றன. நாடு, மொழி, இனம் என்ற பாகுபாடுகளைத் தாண்டி “உயிரினம்” என்ற ஒரே குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிகள் இயற்கை நமக்களித்த நன்கொடைகள் ஆகும்.

சிந்து, கங்கை, யமுனா, சாம்பல், பிரம்மபுத்ரா, நர்மதா, தபதி, மகாநதி, கோதவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி, பெரியார், பம்பை போன்றவைகள் இந்தியாவின் புகழ்பெற்ற பெரும் இவைகள் தாம் இந்தியாவை ஒரு வளம் கொழிக்கும் நாடாக மாற்றுகின்றன.

இந்திய நதிகள்&ஒரு கண்ணோட்டம்!

இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் 2000மி.மீக்கு அதிகமாகவும், மத்திய மாநிலங்களில் 1000 மி.மீ முதல் 200 மி.மீ வரையிலும், தென் மாநிலங்களில் 500 மி.மீ. முதல் 1000 மி.மீ வை ரயிலும் மழை பெய்வதாகவும் நாட்டின் சராசரி மழையளவு- ஆண்டுக்கு 1500 மி.மீ என்றும் அது 1,41,000 டி.எம்.சி (1,41,000 பில்லியன் க.,அடி) நீர் என்றும் புள்ளி விவரம் கூறுகின்றது. இதனால் மழைக்காலங்கில் பெருக்கெடுத்து ஓடிவரும் சிந்து, கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் வட மாநிலங்களையும் மகாநதி, நர்மதா, தபதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகள் மத்திய மாநிலங்களையும் காவிரி, வைகை, தாமிரபரணி, பெரியார், பம்பை, பவானி போன்ற நதிகள் தென் மாநிலங்களையும் வெள்ளத்தில் மிதக்கவைக்கின்றன.

இதனால் நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்கில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சீரழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. மக்கள் வீடுகளை இழப்பதும் பொருட்களை இழப்பதும் மனித உயிர்கள் பறிபோவதும், கால்நடைகள் அடித்துச் செல்லப்படுவதும் சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுவதும் வெள்ளநீர் வடியாமல் தேங்கி நிற்பதும் மின் கம்பங்கள் சாய்வதும் நாம் ஒவ்வொருமுறையும் காணும் அவலக் காட்சிகளாகும்.

இதற்குக் காரணங்கள் பெருமழை, வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சரியான வடிகால்கள் இல்லாததும் வழிந்தோடும் மிகையான நதிநீரைத் தேக்குவதற்கும், மாற்றுக் கால்வாய்களில் திருப்பி விடுவதற்கும் போதிய மராமத்து வசதிகளும், கட்டுமானங்களும் இல்லாததுமே எனக் கூறலாம். இத்தகைய நீண்ட எல்லைப் பயணங்களைக் கொண்ட ஆறுகளை சரிவரப் பராமரிக்காததும் ஆழப்படுத்தாததும் கரையோரங்களைச் செம்மைப்படுத்தாததும் வளைவுப்பாதைகளில் பாதுகாப்பு அணைகள் கட்டப்படாததும் அதிகக் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கங்களையும் ஏரிகளையும் உருவாக்காததுமே மேலும் காரணங்களாகக் கூறமுடியும்.நம்நாட்டில் வேளாண்மையைப் பெருக்குவதற்கும், நாட்டை வளமாக்குவதற்கும், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரே வழி இந்திய நதிகளை இணைப்பதே ஆகும். இதன் மூலம் வடிகால் வாய்க் கால்களை உருவாக்கவும், வெள்ளச் சேதங்களைத் தடுக்கவும், நீர்த்தேக்கங்களில் நீரைத்தேக்கி வறட்சிக் காலங்களில் பயன்படுத்தவும் நீர்மின் உற்பத்தியைப் பெருக்கவும், நீர்ப்போக்குவரத்தை உருவாக்கவும் முடியும்.

நதிநீர்ப் பங்கீட்டுக் கொள்கைகள்!

பன்னெடுங்காலமாய் – நதிநீர்ப் பிரச்சினை என்பது தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. “ஐக்கிய நாடுகள் சபை” (United Nations Organisation) -யும், பன்னாட்டு சட்டக் குழும” (Interational Law Association) மும் இப்பிரச்சினையில் தலையிட்டு இன்றைய “நதிநீர்ப் பங்கீட்டுக் கொள்கை களை உருவாக்கின.

1966 ஆம் ஆண்டு பின்லாந்து நாட்டின் “கெல்சிங்கி” (Kelsinki) நகரில் கூடிய “பன்னாட்டு சட்டக் குழுமமே” முதன் முதலில் உலக நாடுகளுக்-கிடையே நதி நீர்ப் பங்கீட்டுக்கான விதிமுறைகளை வெளியிட்டது இஃது “கெல்சிங்கி விதிகள் 1966” என அழைக்கப்படுகிறது. இதன்படி பல்வேறு நாடுகளுக்கிடையே ஓடிவரும் ஒரு நதியின் நீரை அதன் கரையோரங்களில் அமைந்துள்ள அனைத்து நாடுகளம் (Riparian States) எவருக்கும் பாதிப்பு வராமல் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் அந்நதி கடந்து செல்லும் வழியிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் அந்த நதியின் நீர்ப்பயன்பாட்டில் சரிசமமாகவும் நியாயமான முறையிலும் நீரைப் பெறுவதற்கு உரிமை கொண்டதாகும்“. இந்த விதிமுறைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களாக 1977 ஆம் ஆண்டிலும் பின்னர், 2004 லும் உறுதி செய்யப்பட்டன. இதனைத் தழுவியே எல்லைகள் தாண்டிப் பாயும் நதிகளின் (Transboundary Rivers) நீரைப் பங்கீடு செய்வது சம்பந்தமாக “பன்னாட்டு நதிநீர்ச் சட்டம்” உருவாக்கப்பட்டது. 2014 லிருந்து நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த சட்டத்தையே “பன்னாட்டு நதிநீர்ச் சட்டம்” (International Water Law) என அழைக்கிறோம். இந்தியாவில் நீர்ச்சம்பந்தமான சட்ட விதிமுறைகள் “தேசிய நீர்க்கொள்கை” (National Water Policy) யின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. 1987 செப்டம்பரில் மத்திய நீர்வளத்துறையால் கொண்டு வரப்பட்ட முதலாவது “தேசிய நீர்க்கொள்கை”யில் நீர்ப்பங்கீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பின்னர், 2002-ல் இது மறுபரிசீலனை செய்யப்பட்டு “தேசிய நீர்க்கெர்கை -2002” என நடைமுறைக்கு வந்தது இதில் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பங்கீட்டுச் செயல்பாடுகள் தேசிய முன்னோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்குத் தகுந்தாற்போல் நடைமுறை யிலுள்ள மாநிலங்களுக்கிடையிலான நீர் மோதல்கள் சட்டம் -1956” (Water Disputes Acts 1956)ஐ பொருத்தமான முறையில் திருத்தம் செய்து சட்டமாக்கப்பட வேண்டும்“என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 16 அம்சங்களை வலியுறுத்தி 2012-ல் கொண்டுவரப்பட்ட “தேசிய நீர்க்கொள்கை 2012”ல் ஒரு அம்சமாக “தேசிய நீர்சார் நெறிமுறைச் சட்டம்” (national Water Framework Law) வலியுறுத்தப்பட்டது. அதன்படி இந்தியாவின் புசுவது திட்டக்குழுவால் தாயாரிக்கப்பட்ட இச்சட்டம் இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே ஓடும் நதியின் நீரை அதன் கரையோரங்களிலுள்ள அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் சமமாகவும் சுமூகமாகவும் பிரித்துக் கொண்டு பயன்படுத்த உத்தரவாதம் அளித்தது.” இதன் மூலம் மத்திய மாநில உறவுகள் மேம்படவும் மாநிலங்களுக்கிடையிலான சகோதரத்துவம் வளர்ந்து சுமூக நிலைக் காணவும் வழிகள் பிறந்துள்ளன.

நதிகள் இணைப்புப் திட்டங்களின் வரலாறும் பின்னணியும்!

ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1919ல் சென்னை மாகாணத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த “சர் ஆர்தர் காட்டன்” என்பவர்தான் இந்தியப் பெரும் நதிகளை இணைக்கும் திட்டத்தை முதன் முதலில் முன்மொழிந்தவர் ஆவார். அதன் பின்னர் 1972-ல் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் அணைக் கட்டுமானப் பொறியாளாருமான டாக்டர்.கே.எல்.ராவ் அவர்கள், “தேசிய நீர்வழி இணைப்பு” என்ற திட்டத்தை அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் அதே நேரத்தில் தென்னிந்தியாவில் மோசமான வறட்சி நிலை காணப்படுவதையும் பார்த்து இவர் ஆழ்ந்த சிந்தனை கொண்டார். இதன் காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கங்கை நதிகள் அளவுக்கதி-கமான நீரைப் பெற்றிருப்பதாலும் மத்திய மற்றும் தென்னிந்தியப் பகுதிகள் நீர்ப்பற்றாக் குறையைக் கொண்டிருப்பதாலும் அந்த “அளவுக்கதினமாக நீரை பற்றாக்குறை பகுதிகளுக்குத் திருப்பிவிடலாம்” என்ற திட்டத்தை முன்மொழிந்தார். இன்று எல்லோராலும் பேசப்படும் “கங்கை-காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை 1972ல்” முதன் முதலாக வெளியிட்டவரும் இவரே ஆகும்.

பின்னர், பு980ல் மத்திய நீர்வளத்துறை – “நீர் ஆதார வளர்ச்சிக்கான தேசிய முன்னோக்குகள்” (National Perpectives for Water Developemnt) என்ற திட்ட அறிக்கையை வெளியிட்டது. இத்திட்ட அறிக்கையிலும் இந்திய நதிகளை இணைக்கும் திட்டங்கள் வலியுறுத்தப்பட்டன.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் 1982ல் மத்திய நீர்வளத்துறை தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை” (National Water Development Agency) என்ற அமைப்பை உருவாக்கி இந்திய நதிகளை இணைக்கும் பொறுப்பை ஒப்படைத்து. இவ்வமைப்பு நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டு நதிகள் இணைப்பை மூன்று பகுதிகளாகப் பிாித்தன. அவையாவன

1. இமயமலைப் பகுதி நதிகளை இணைக்கும் திட்டங்கள். (மொத்தம் 14)

2. இந்திய தீபகற்பப்பகுதி நதிகளை இணைக்கும் திட்டங்கள் (மொத்தம் 16)

3.மாநில எல்லைக்குள்ளே நதித் தீரங்களை இணைக்கும் திட்டங்கள் (மொத்தம் 37) ஆகும். இதற்கான ஆயத்தப் பணிகள் 1998 வரை தொடங்கப்படாமல் இருந்தது.

பின்னர், 1999 ஆம் ஆண்டில் இத்திட்டங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன. 2002ல் போடப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்நதிகள் இணைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்கவும் 2003க்குள் இதற்கான ஒரு வரைவுத் திட்டம் தயாரித்து 2016-க்குள் செய்து முடிக்கவும் கேட்டுக்கொண்டது. இதன்படி முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 2003ல் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் பணிக்குழு ( (Task Force) ஒன்றை நியமித்தார்.

2004ல் இத்திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதும் இதன் வரலாற்றுத் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வாகும். 2012ல் மீண்டும் உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு மத்திய அரசை கேட்டுக் கொண்டது. இவ்வாறாக 1982லிருந்து 2012 வரை 30 ஆண்டுகளாக “தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை”யினால் தயாரிக்கப்பட்ட பல நதிகள் இணைப்புத் திட்ட அறிக்கைகளை பல்வேறு நிபுணர் குழுக்கள் தொடர்ந்து ஆதரித்தும் நிராகரித்தும் வந்தன.

இந்திய நதிகள் இணைப்புத் திட்டங்கள்!

2002ல் போடப்பட்ட பொதுநலவாழ்க்கை 2012-ல் முடித்து வைத்த உச்சநீதி மன்றம் இந்திய நதிகளை இணைக்கும் திட்டங்களை பரிசீலிக்க ஒரு “சிறப்புக் குழுவை” (Special Committee) அமைக்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. இதன்படி 2014 ஆகஸ்டில் மத்திய அமைச்சரவை “சிறப்புக்குழு” அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015 ஏப்ரலில் மத்திய நீர்வளத்துறை நதிகள் இணைப்பைச் செயல்படுத்த “பணிக்குழு” ( Task Force) வை மீண்டும் நியமித்தது.

இதன் முன்னோட்டமாக கிருஷ்ணா கோதவரி நதிகளுக்கிடையே முதல் நதிநீர் இணைப்பு 2015 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. தற்சமயம், மொத்தம் 31 நதிகள் இணைப்புத்திட்ட ஆய்வறிக்கைகள் தேசிய முன்னோக்குத் திட்டத்தின் கீழ் தயாராக உள்ளன. மத்திய தரைவழிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்திய நதிகள் இணைப்புத் திட்டங்களை இந்தியாவின் கனவுத்திட்டமாக அறிவித்துள்ளார்.