July 29, 2025

எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட சுற்றுப்பயணம்…
நம்பிக்கை தருகிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி பேராவூரணியில் நிறைவுப் பெற்றிருக்கிறது. 16 நாட்களில் 37 தொகுதிகளை அவரது சுற்றுப்பயணம் நடந்து முடிந்து இருக்கிறது. எடப்பாடியின் இந்த சுற்றுப்பயணம் நடைப்பயணமாக திட்டமிடப்பட்டு வாகன பயணமாக மாற்றி அமைக்கப்பட்டு நடந்து முடிந்து இருக்கிறது. இந்த பிரச்சார பயணத்தில் தோழமை கட்சியான பாஜக கட்சி தலைவர்களும் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மேட்டுப்பாளையத்தில் மேற்கு தமிழகத்தில் தொடங்கிய பயணத்தில் எதிர்பார்த்த அளவு கொங்கு பகுதியில் கூட்டங்கள் அதிக அளவில் இல்லையென்றாலும் வடதமிழகத்தில் உள்ள விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் கூடிய கூட்டங்கள் மிகப் பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் மகிழ்ச்சியு-ம் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கடலூரில் எம்.சி.சம்பத், அருள்மொழி தேவன், சொரத்தூர் ராஜேந்திரன் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி பெரிய அளவில் அமைந்துள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி பாராட்டி உள்ளார். அதே போல் பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் எடப்பாடி அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்துள்ளது. ஓ.எஸ்,மணியன், காமராஜ் போன்றவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் இந்த 16 நாட்கள் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய அளவில் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. ஒப்பிட்டு பார்க்கையில் மேற்கு தமிழகத்தை விட வடக்கு தமிழகத்தில் 10.5 இடஒதுக்கீடு வழங்கியதால் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு அலை வீசுகிறது என்று கூறுகிறார்கள். இன்னும் அடுத்தக் கட்ட பயணத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இரண்டாம் கட்ட பயணத்தின் போது மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடும் கூடுகின்ற கூட்டங்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுமட்டுமல்லாமல் பயண திட்டத்தை வகுத்துள்ள இரகசிய சர்வே மூலம் எடப்பாடிக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயணத்தில் 60 தொகுதிகளில் தனது பயணம் இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாம். முதற்கட்ட பயணத்தில் சில குறை இருந்தாலும் நம்பிக்கை தரும் நிறைகளே அதிகமாக இருக்கிறது என்று புலனாய்வு சர்வே ரிப்போட் கூறுகிறது என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
– பெருந்தமிழன்