உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஹென்லி என்ற அமைப்பு வெளியிடும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா இந்தாண்டு 5 இடங்கள் சரிந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவும் கூட மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஹென்லி என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் லிஸ்ட்டை வெளியிடும். அந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவர முடியும் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான லிஸ்ட் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்டில் இந்தியா 85வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 57 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணம் செய்யலாம். கடந்த ஆண்டு, இந்த பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் இருந்தது.. அப்போது 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிந்தது. ஆனால், இப்போது ஒரே ஆண்டில் 5 இடங்கள் நாம் சரிந்துள்ளோம். இப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் அங்கோலா, பார்படாஸ், பூடான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, இந்தோனேசியா, ஈரான், ஜமைக்கா, கஜகஸ்தான், கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து உள்ளது. சிங்கப்பூர் மக்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அடுத்து 190 நாடுகளுக்கான விசா இல்லாத பயணத்துடன் தென்கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளது.தொடர்ந்து 189 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தோடு ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. டாப் 10 நாடுகள் ஜெர்மனி, இத்தாலி, லக்ஸம்பர்க், ஸ்பெயின், மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மக்கள் தலா 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். இதன் மூலம் இந்த நாடுகள் நான்காம் இடத்தை பிடிக்கின்றன.. ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் (187 நாடுகளுக்கு விசா இல்லாத பயணம்) ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன. ஹங்கேரி, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் 186 நாடுகளுக்கான விசா இல்லாத பயணத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளன.
அமெரிக்க விசா வைத்திருப்போர் வெறும் 180 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் சென்று வர முடிகிறது. இதன் மூலம் அவர்கள் இந்த லிஸ்டில் மலேசியாவுடன் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கா முதல் 10 இடங்களுக்கு வெளியே வருவது இதுவே முதல் முறை. கடந்தாண்டு அமெரிக்கா ஏழாவது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது ஒரே இடத்தில் 5 இடங்கள் சரிந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் 103வது இடத்தில் உள்ளது. அந்நாட்டினர் 31 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். வங்கதேசம் 100வது இடம் (38 நாடுகள்), நேபாளம் 101-வது இடம் (36 நாடுகள்), பூடான் 92வது இடம் (50 நாடுகள்) இலங்கை 98-வது இடம் (41 நாடுகள்) உள்ளன. உலகிலேயே மிகவும் பலவீனமான பாஸ்போர்ட்டாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அந்நாட்டின் குடிமக்கள் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்.
- தொ
More Stories
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத தவெக.. சீமானுக்கு விஜய் மீது வந்த ” கடும் கோபம்”..
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி