October 11, 2024

மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் துருவும் இணைந்து நடித்து வெளியாக காத்திருக்கும் ‘மகான்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என கூறப்படுகிறது


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.