பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் அனுமதியுடன் தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை பல அதிரடி திட்டங்களை தயாரித்து வருவதுடன் தென்மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை குறிவைத்து காவேரிக்கு தெற்கே திமுகழகத்தின் செல்வாக்கை இழக்க செய்த அதிமுக வாக்கு வங்கியை பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் பாஜக கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான ஏற்பாட்டினை செய்வதுடன் பசும்பொன் சென்று தேவர் திருமகனார் நினைவிடத்தில் மலர்மாலை அணிவிப்பதும் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் சென்று மாலை அணிவிப்பதும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.
இவை தவிர தேவர் சமுதாய வாக்குகள் பட்டியலினத்தை சேர்ந்த தலித் வாக்குகள் மற்றும் நாடார், நாயுடு, போன்ற இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைத்து சுமார் 10 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டம் அண்ணாமலையால் உருவாக்கப்பட்டு அதற்கான பணியை தொடங்கிவிட்டார்கள் என்ற தகவல் ஆளுங்கட்சியான திமு கழகத்திற்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றது. வடமாவட்டங்களை பொறுத்தவரை மிகக் குறைந்த அளவு மட்டுமே பாஜக கட்சி தனது கவனத்தை செலுத்தி வருவதுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக கட்சியுடன் இணைந்து எத்தகைய வெற்றியை பெற்றாலும் அதை ஏற்றுக்கொள்வதும் எனவும் பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை தீவிரப்படுத்துவதுடன் பாஜக கட்சியை வலுப்படுத்தி, வாக்குவங்கியை அதிகப்படுத்தி அதிமுக கட்சியுடன் இணைந்து சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவதற்காக அண்ணாமலை பல அதிரடி வியூகங்களையும், திட்டங்களையும் தயாரித்து வருவதுடன் அதை எவ்வாறு எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் கட்சியினருடன் கலந்து பேசி வருகிறார். திட்டம் வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
– டெல்லிகுருஜி