சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு டி.பி.ஐ. என்று பெயர் இருந்து வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவும் அங்கு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அரசின் சார்பில் இப்போது அன்பழகனின் நூற்றாண்டு நினைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் டி.பி.ஐ. முகப்பில் அவரது பெயரில் நூற்றாண்டு வளைவு கட்டி முடிக்கப்பட்டது. அந்த வளைவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டினார். நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…