புதுடெல்லி : நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் (ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு) பிரான்செஸ்கோ பிரான்கா கூறியதாவது:- சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு இல்லாத பொருட்களை (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துவது, நீண்ட காலத்துக்கு உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவாது. மாற்று பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப்பொருட்கள் ஆகிவிடாது. அவற்றில் ஊட்டச்சத்தும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே உணவில் இனிப்பை முழுமையாகக் குறைக்க வேண்டும். எனவே பழங்கள், இனிப்பு இல்லாத உணவுகள், பானங்கள் போன்ற இயற்கையாக சர்க்கரையுடன் கூடிய உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பிற வழிகளை பயன்படுத்தி சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்கலாம்.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!