இஸ்ரேல் வீராங்கனையை முதல் போட்டியிலும், இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பி.வி. சிந்து.
இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்தார். இந்த குரூப்பில் ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் வீராங்கனைகளும் இடம் பிடித்திருந்தனர்.
25-ம் தேதி நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இஸ்ரேல் வீராங்கனையை 2-0 (21-7, 21-10) என வீழ்த்தியிருந்தார். இன்று ஹாங்காங் வீராங்கனை நான் யி செங்-கை எதிர்கொண்டார். இந்த போட்டியிலும் பி.வி. சிந்து அபாரமாக செயல்பட்டார். முதல் செட்டை 21-9 எனவும், 2-வது செட்டை 21-16 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப்பில் முதல் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேறினார்.
More Stories
சென்னையில் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!!
ஆசிய விளையாட்டு போட்டி – மேலும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி- 27 பதக்கங்களுடன் 3ம் இடம் பிடித்தது இந்தியா