December 3, 2024

அன்பழகன் காட்டிய சுயமரியாதை மிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர்.

திராவிடக் கொள்கையே உயிரெனக் கொண்டவர். பெரியார், அண்ணா வழியில், கலைஞரின் உற்ற தோழராய் இருந்து இயக்கம் காத்தவர் பேராசிரியர் அன்பழகன்.

என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் அறநெறி ஆசானாகவும் இருந்தவர். தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என்பதை ஒவ்வொரு மேடையிலும் உரக்க முழங்கியவர். தமிழ் நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர்.

திராவிடக் கருத்தியலைப் பயிற்றுவித்து, இளைய தலைமுறையினருக்குக் கொள்கை உரம் ஊட்டியவர். கழகத்தின் பொதுச் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அயராது செயலாற்றிய இனமானப் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தி, அவர் காட்டிய சுயமரியாதைமிக்க லட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் என உறுதியேற்கிறேன்.