மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இயக்குனர் நவீன் பகிர்ந்துள்ளார். ‘அக்னிச்சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற போது, அங்கு எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கு விக்டர் என்பவர் தான் பயிற்சி கொடுத்துள்ளார்.
அப்போது அருண் விஜய், தனக்குத் தெரிந்த வித்தைகளை விக்டரிடம் செய்து காட்டியிருக்கிறார். அருண்விஜய் அந்தர்பல்டி அடித்ததைப் பார்த்து அசந்துபோன விக்டர், உனக்கு ரிகர்சலே தேவையில்லை, நேரடியா ஷாட்டுக்கே போயிடலாம் என்றாராம். ஸ்டண்ட் மாஸ்டர் விக்டர் பல ஹாலிவுட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது