தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட மேம்பட வேண்டும் பொது தேர்விலும் போட்டி தேர்வுகளிலும் புதிய உச்சத்தை தொட வேண்டும் சாதனை படைக்க வேண்டும், திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னால் ஆன உதவியை மாணவ மாணவிகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் உலகளவில் கல்வியை பயன்படுத்தி கல்வி தான் நம்மை முன்னேற்றும் படிகட்டு கல்வி தான் நமது எதிர்காலத்திற்கான திறவுகோள், கல்வி தான் நம்மை காக்கும் ஆயுதம் என்பதனை உணர்த்தும் வகையில்
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பு தேர்வில் வெல்வோம் என்ற பெயரில் இரண்டு தொகுப்புகளும்,
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா விடை தொகுப்பு “தேர்வில் வெல்வோம்“ என்ற மூன்று தொகுப்புகளும்,
12ஆம் மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பு “தேர்வில் வெல்வோம்“ என்ற தலைப்பில் மூன்று தொகுப்புகளும் மொத்தம் எட்டு நூல்களை தயார் செய்து ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில், தனது சொந்த செலவில் கல்வியாளர்களின் கருத்துக்களையும், அறிஞர் பெருமக்களின் ஆலோசனைகளையும் கேட்டறிந்து தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய ஆறு பாடங்களுக்கான வினா விடை தொகுப்புகளை அச்சிட்டு மாணவ மாணவிகள் கல்வியின் தரத்தை அறிந்து உயர்ந்து வெற்றிப் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக அரசிற்கும் பெருமையும், புகழையும் சேர்க்கும் வண்ணம் இந்த சேவையை அமைச்சர் சிவசங்கர் செய்து வருகிறார். தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சா.சி.சிவசங்கர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தம் இல்லாமல் ஒரு மிகப் பெரிய திட்டத்தை நிறைவேற்றி வரும் அமைச்சரை வாழ்த்தி பாராட்டலாம். சமச்சீர் கல்வி கொண்டு வந்து தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், அதே வழியில் இன்றைய முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன்” திட்டத்தை கொண்டு வந்து மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் மாணவர்கள் உலகளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான திட்டங்களை அளித்துவருவதுடன் மாணவ மாணவிகள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தியும் வருகிறார். இந்த வினா விடை நூல்களை பயன்படுத்தி அனைத்து வழிகளிலும், மாணவ மாணவிகள் கல்வியின் தரத்தையும், வாழ்க்கை தரத்தையும், உயர்த்திக் கொண்டால் பல சாதனைகள் பட்டியலில் தங்கள் பெயரும் இடம் பெறும் என்பது உறுதி.
தமிழக அரசியலில் பல அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து பல திட்டங்களை நிறைவேற்றினாலும், அமைச்சர் சிவசங்கர் அவர்களின் சேவை என்பது அடுத்த தலைமுறைகளையும், வழிநடத்தக் கூடிய திட்டமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
– டெல்லிகுருஜி

More Stories
பெங்களூர் டிராபிக்! மெகா திட்டத்தை கையில் எடுக்கும் கர்நாடக அரசு!
மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் மாதம் தோறும் 1000 ரூபாய்!
உலகின் வலிமையான பாஸ்போர்ட் லிஸ்ட்!