October 18, 2025

பெங்களூர் டிராபிக்! மெகா திட்டத்தை கையில் எடுக்கும் கர்நாடக அரசு!

பெங்களூர் டிராபிக் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முக்கியமான ஒரு திட்டத்தைக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த 117 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச் சாலைத் திட்டத்தின் மூலம் நெரிசலைக் குறைக்கக் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திட்டத்திற்கு “பெங்களூரு பிசினஸ் காரிடார்” எனப் புதிய பெயரிடப்பட்டு, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிக டிராபிக் நெரிசல் கொண்ட நகரங்களில் ஒன்றாகப் பெங்களூர் இருக்கிறது. அங்கு நகரம் முழுக்க டிராபிக் நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூர்வாசிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தினசரி சில மணி நேரம் வரை டிராபிக்கிலேயே நேரத்தை இழக்கும் சூழல் இருக்கிறது. பெங்களூர் வளர்ச்சி ஆணையம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இது நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளோம். இப்போது பெங்களூர் நகரமே திணறுகிறது. போக்குவரத்து நெரிசலை உடனடியாக குறைக்க வேண்டும். எங்கள் திட்டத்தால் சுமார் 1,900 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.. ஆனால் அரசு அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக இழப்பீட்டை வழங்க ரெடியாக உள்ளோம். இது கர்நாடக அரசின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். இந்தக் காரிடார் செயல்படத் தொடங்கியதும், நகரப் போக்குவரத்து 40 சதவீதம் வரை குறையும். ஏனெனில், இந்த சாலை அமைக்கப்பட்டவுடன் தொழில் மண்டலங்களுக்கு இடையே செல்லும் வாகனங்கள் நகருக்குள் வராது.

ஒருவேளை யாராவது சில நில உரிமையாளர்கள் நிலம் கொடுக்க மறுத்தால், இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டுத் திட்டத்தைத் தொடர்வோம். எந்தச் சூழ்நிலையிலும் திட்டத்தை மாற்றி அமைக்க மாட்டோம்” என்றார். செலவு குறைவு முதலில் இத்திட்டத்திற்கு ₹27,000 கோடி செலவாகும் எனச் சொல்லப்பட்டது. இருபிணம் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீடுகளில் இதற்கு ₹10,000 கோடிக்கும் குறைவாகச் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பல விவசாயிகள் தங்களுக்குப் பணம் தேவையில்லை.. அதற்குப் பதிலாக வேறு ஒரு பகுதியில் நிலத்தைத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு மாற்று இடத்தை வழங்கக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு ஐந்து வகையான இழப்பீட்டுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது இந்த பெங்களூர் பிசினஸ் காரிடார் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, தொழில்துறை வளர்ச்சியையும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும், இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் பெங்களூர் ஒரு முக்கிய முதலீட்டு மையமாக மாறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • தொ