October 16, 2025

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத தவெக.. சீமானுக்கு விஜய் மீது வந்த ” கடும் கோபம்”..

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க அனுமதி கிடைத்தது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறியிருந்தது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சீமான் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்பது குறித்து தன்னுடைய கருத்தை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார், செய்தியாளர்களிடம் சீமான் பேசும்போது, “சிபிஐ துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் இரண்டு மூளைகள் இருக்கின்றனவா. நீதிபதி தலைமையில் விசாரணையை போடுவது எல்லாம் திசை திருப்பி விடுவது தான். இப்படித்தான் நடக்கும்.

மாநில தன்னாட்சிக்கு போராடிவிட்டு, இவ்வளவு பெரிய காவல்துறையை வைத்துக் கொண்டு அவர்கள் விசாரிப்பது சரியில்லை என்றால் எப்படி. இது ஒரு மாநிலம், காவல்துறையை அவமதிக்கும் செயல் என்று காட்டமாக கூறியிருந்தார். நீதி வெல்லும் இந்நிலையில், Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, “நீதிவெல்லும் என்ற ஒரே வார்த்தை சொல்லி உள்ளார் விஜய். வேறு எதுவுமே பேசவில்லை.. விஜய்யின் இந்த அணுகுமுறை மிகவும் புதுமையாக உள்ளது.. ரீ-ட்வீட் அது பாட்டுக்கு ஷேர் ஆகிபோயிட்டே இருக்கு. இதுவே வேறு யாராவது அரசியல் கட்சி தலைவராக இருந்தால், இந்நேரம் மீடியாக்களை எல்லாம் அழைத்து, மேடை போட்டு, பேசியிருப்பார்கள்.. இதை இன்னும் அரசியலாக மாற்றியிருப்பார்கள். ஆனால் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளாமல், நீதி வெல்லும் என்ற நறுக்கென டுவீட் போட்டுவிட்டார்.

2 பாஜக உறுப்பினர்கள் சிபிஐ விசாரணையை விஜய் கேட்டதாக நிறைய பேர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. பாஜக தரப்பில் 2 உறுப்பினர்கள்தான் சிபிஐ கேட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் வேண்டும் என்றுதான் விஜய் தரப்பில் கேட்டார்கள். தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடனே இதற்கு சீமான், மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? மாநில காவல்துறையை அவமானப்படுத்துகிறீர்களா? என்று கேட்கிறார். அண்ணாமலை – சீமான் இதற்குதான் அண்ணாமலை சரியான பதிலடியை தந்தார்.. இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது குட்கா விவகாரம், முகலிவாக்கம் கட்டிடம் சம்பவத்துக்கெல்லாம் சிபிஐ கேட்டார் என்று நினைவில்லையா? என்று சீமானை பார்த்து கேட்டார்.

ஆனால் சீமான் ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார் தெரியவில்லை.. விக்கிரவாண்டி மாநாடு நடந்தததிலிருந்தே சீமான் ஒரு மாதிரி ஆயிட்டாரு.. நம்ம கூட தம்பி, தம்பி என்றிருந்தவர்கள் எல்லாம் விஜய் பக்கம் சாய்ந்துவிட்டார்களே? என்ற எண்ணம்தான்.. இதற்கு பிறகு மதுரை மாநாடு சொல்லவே தேவையில்லை.. பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம், கதிகலங்க செய்துவிட்டது, பொதுவாக சொல்கிறேன், எப்போதுமே இளைஞர்களை ஏமாற்றவே முடியாது.. அவர்களை பிரெயின் வாஷ் செய்ய முடியாது.. இளைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.. ஆனால், அவர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள், ஏமாற்றுகிறீர்கள் என்று தெரிந்தால் ஒட்டுமொத்தமாக திரும்பி விடுவார்கள். இளைஞர்கள் முடிவு என்ன முடிவெடுக்க தெரியாமல், ரெண்டாங் கெட்ட வயதுடையவர்கள், ஒருவரை நம்பிவிட்டால், அப்படியே அவர் பின்னாடியே சென்றுவிடும். அரிதாரம் பூசியவர், கூத்தாடி, நடிகர், யாரோ எழுதி தந்ததை பேசுபவர், மீடியாவை சந்திக்காதவர் என்றெல்லாம் விமர்சனம் செய்தவர் பின்னாடிதான் இத்தனை இளைஞர் கூட்டமும் இன்று நிற்கிறது. பன்ச் டயலாக் 2 வருடங்களுக்கு முன்பு வரை பன்ச் டயலாக் பேசி கொண்டிருந்தவருக்கு இன்று இவ்வளவு மாஸா? ஆப்பில் உறுப்பினர் சேர்க்கையிலேயே இவ்வளவு கூட்டமா? என்பதால்தான், தன்னுடைய காண்டை இப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார் சீமான்.. இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், விஜய் பாஜகவின் கைக்கூலியாக மாறிவிட்டார், தவெகாவை மொத்தமாக பாஜக கையில் எடுத்துவிட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இந்த விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.,. ஆனால் இதற்கு பிறகு விஜய் செய்யக்கூடிய அரசியல் மக்களுக்கானது என்பதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது என்றெல்லாம் தெரிவித்துள்ளார்,

  • தொ