October 13, 2025

‘சென்னை ஒன்’ செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய சென்னை ஒன்’ மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

‘சென்னை ஒன்’ செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம். இந்நிலையில் சென்னையில் மாநகர போக்குவரத்து பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறுவதுபோல, சென்னை ஒன் செயலியிலும் மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பாஸ் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

  • தொ