October 22, 2025

இன்று நாட்டின் 79வது சுதந்திர தினம்

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். முன்னதாக, தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை வழங்குகிறார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 9,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • தொ