October 13, 2025

2026-ல் தேர்தலில் தனித்துதான் போட்டி: சீமான் திட்டவட்டம்..!

2026 தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதும் உறுதியாகியுள்ளது. சீமான், விஜயும் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செத்து சாம்பலானாலும் 2026 தேர்தலில் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 1.1 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு கட்சி 8.22 சதவீதம் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது தமிழக வரலாற்றில் உண்டா?. எல்லா கட்சியும் செத்து போய் விடும கலைந்து ஓடி விடுவார்கள். த.வெ.க. வருவதால் நா.த.க. கட்சிக்கு வாக்குகள் குறைந்து விடும் என்கிறார்கள். இப்படி ஏன் பயம் காட்டுகிறார்கள் தெரியுமா?, அப்போதாவது கட்சி கலைந்துவிடும், ஏதாவது ஒரு கூட்டணிக்கு போய் விடுவார் என்பதற்குதான். செத்து சாம்பலானாலும் ஆகுவோமே தவிர, கூட்டணி சேராமல் தனியாகத்தான் போட்டியிடுவோம். அது ஒன்னுமில்லாமல் போய்டும் என்கிறார்கள்.

  • தொ