October 13, 2025

அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக திரும்பும் சூழல்
அப்படி இந்தியாவின் மீது டிரம்ப்க்கு என்ன தான் கோபம்…?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை கடந்த சில நாட்களாக தீவிரமாக எதிர்க்க முக்கியமான சில காரணங்கள் உள்ளன, இந்தியா செய்த சில நடவடிக்கைகள் காரணமாகவே அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக வெள்ளை மாளிகையின் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவு அமையும் சூழல் இருந்தாலும்.. இப்போது அதில் சிக்கல்கள் நிலவுகின்றன.. விரைவில் அவை சரியாகும் என்று நம்புகிறேன்.. ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய ஹோவர்ட் லுட்னிக், இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்குவது மற்றும் அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் ஙிஸிமிசிஷி அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மன்றத்தின் (ஹிஷிமிஷிறிதி) உச்சி மாநாட்டில் பேசிய லுட்னிக், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ஆழமாக மதிக்கிறார், மேலும் இரு நாடுகளும் “சிறந்த உறவை” கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்குகிறது. டாலருக்கு எதிராக புதிதாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது, மனித வளம் அபரிமிதமாக இருக்கிறது, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வியக்கத்தக்க அளவில் உள்ளதாது. இருப்பினும், இந்திய அரசாங்கம் சில விஷயங்களைச் செய்திருப்பது அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தியா ரஷ்யா நெருக்கம் “பொதுவாக இந்தியா ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இது அமெரிக்காவின் மன வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயல். இந்தியா அமெரிக்காவிலிருந்து ராணுவ தளவாடங்களை வாங்கத் தொடங்கியுள்ளது, இது ஒரு நல்ல விஷயம்.. ஒரு நல்ல மாற்றம்.

BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) குழுவில் இந்தியாவின் பங்கேற்பு சரியானதாக இருக்காது. அமெரிக்க டாலரை ஆதரிப்பதிலிருந்து விலகிச் செல்வது சரியாக இருக்காது. இந்தியாவின் இந்த செயல் அமெரிக்காவில் நண்பர்களை உருவாக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ சரியான வழி அல்ல. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவில் எதிரிகளை வேண்டுமானால் சம்பாதிக்கலாம். இதுதான் இந்தியா மீதான அமெரிக்காவின் கோபத்திற்கு காரணம். அதிபர் டிரம்ப் அதை நேரடியாகவும் மறைமுகமாவும் சுட்டிக்காட்டுகிறார், இந்திய அரசாங்கம் அதை புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளை பேசி தீர்ப்பதன் மூலம் ஒரு நல்ல முடிவை எட்ட முடியும். பிரச்சனைகளை வெளிப்படையாக விவாதித்து, நேர்மையாக தீர்வு கண்டு நல்ல நிலைக்கு வரலாம். அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், என்று கூறி உள்ளார். இந்தியா முதுகில் குத்திய டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் அரசியலில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் கூக்கிற்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டாம் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில், நேற்று டிம் கூக் உடன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டது. நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் என் ஃப்ரெண்ட், நான் உங்களை ரொம்ப நன்றாக நடத்துகிறேன். ஆனால் நீங்கள் பல பில்லியனை இந்தியாவில் முதலீடு செய்கிறீர்கள். இப்போ இந்தியா முழுக்க கட்டிடம் காட்டுவதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் கட்டிடம் கட்டுவதை நான் விரும்பவில்லை.

இந்தியாவை கவனித்துக் கொள்ள விரும்பினால், நீங்க இந்தியாவில் கட்டிடம் கட்டலாம். ஆனால் நீங்கள் அமெரிக்க நிறுவனம். இந்தியாவில் கட்டிடம் கட்ட கூடாது. ஏனென்றால் இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அதனால இந்தியாவில் உங்கள் பொருட்களை விற்பது ரொம்ப கஷ்டம். நீங்க பல வருஷமாக சீனாவில் கட்டிய எல்லா பிளாண்ட்களையும் நாங்க பொறுத்துக்கிறோம். ஆனால் இப்போது நீங்க இந்தியாவில் கட்டுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளட்டும்.. நீங்கள் அமெரிக்காவை பாருங்கள் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்தியா தனது இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. 100% குறைக்கவில்லை என்றால் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்திய அமெரிக்கா போர் பற்றி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா – பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில்பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம், என்று கூறினார். சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள்., என்று கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா – பாக். தாக்குதல் நிறுத்தம் குறித் பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • தொ