தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நாளை (12-ந் தேதி) தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது. வழக்கமாக அரசு தேர்வின்போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.
- தொ
More Stories
கௌரவம் பார்க்கும் நேரம் அல்ல..
இழப்பதற்கு ஒன்றுமில்லை…
அன்புமணிக்கு வழிகாட்டுங்கள்!
எதிரிகளை எண்ணிப் பார்த்து ஒன்று கூடுங்கள்…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்!
தர்மபுரி மாவட்டத்தில் சாலைகள் சீர்படுத்த வேண்டும்!
கிபா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசுவரன் வேண்டுகோள்!